சிண்டாவின் இளையர் தலைமைத்துவக் கருத்தரங்கு

2 mins read
16c0929d-21c6-4222-bdec-cbc6b67286b8
-

இளை­யர்­க­ளி­டையே தலை­மைத்­து­வப் பண்­பு­களை வளர்க்­க­வும் சேவை மனப்­பான்­மையை விதைக்­க­வும் தொடங்­கப்­பட்­டது, 'சிண்டா இளை­யர் தலை­மைத்­து­வக் கருத்­த­ரங்கு'.

ஆண்­டு­தோ­றும் ஏற்­பாடு செய்­யப்­படும் சிங்­கப்­பூர் இந்­திய மேம்­பாட்­டுக் கழக (சிண்டா) இளை­யர் மன்­றத்­தின் இந்­நிகழ்வு, ஈராண்­டு­க­ளுக்­குப் பிறகு கடந்த ஆண்டு டிசம்­பர் மாதம் இடம்­பெற்­றது.

பல­து­றைத் தொழிற்­கல்­லூரி, தொழில்­நுட்­பக் கல்­விக் கழக, தொடக்­கக் கல்­லூரி மாண­வர்­கள் ஏறத்­தாழ 50 பேர் இந்த மூன்று நாள் கருத்­த­ரங்­கில் கலந்­து­கொண்டு பல்­வேறு குழு நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டி­ருந்­த­னர். கடந்த ஆண்டு டிசம்­பர் 17ஆம் தேதி­யி­லி­ருந்து 19ஆம் தேதி வரை நடை­பெற்­றது இந்­தக் கருத்­த­ரங்கு.

முதல்­மு­றை­யாக கடந்த ஆண்­டின் கருத்­த­ரங்­கில் கலந்­து­ கொண்ட தொழில்­நுட்­பக் கல்­விக் கழக இரண்­டாம் ஆண்டு மாண­வர் தஷ்­வின் விஜ­ய­கு­மார், இக்­க­ருத்­த­ரங்கு தனது கண்­ணோட்­டத்தை மாற்­றி­ய­மைத்­த­தாக கூறி­னார். பல­த­ரப்­பட்ட குடும்­பப் பின்­ன­ணி­க­ளி­லி­ருந்து வந்­தி­ருந்த இளை­யர்­க­ளைச் சந்­திக்க இந்­நி­கழ்வு வாய்ப்­ப­ளித்­த­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

"குறைந்த வரு­மா­னக் குடும்­பத்­தைச் சேர்ந்த நான், அது குறித்து ஒரு­வகை தாழ்வு மனப்­பான்மை கொண்­டி­ருந்­தேன். ஆனால், சிண்­டா­வின் கருத்­த­ரங்­கில் என்­னைப் போன்ற பின்­ன­ணி­யி­லி­ருந்து வந்­தி­ருந்த பல இளை­யர்­க­ளைச் சந்­தித்­தேன். அவர்­க­ளு­டன் உரை­யா­டி­யது எனக்கு ஊக்­க­ம­ளித்­துள்­ளது," என்­றார் அவர்.

முதல் நாளன்று, சுய புரி­த­லுக்­கான வழி­காட்­டு­தலை வழங்­கும் நோக்­கில், குழுக் கலந்­து­ரை­யா­டல்­கள் முத­லிய நட­வ­டிக்­கை­கள் இடம்­பெற்­றன.

வெளி­நாட்டு ஊழி­யர்­கள், குறைந்த வரு­மா­னக் குடும்­பங்­கள் ஆகி­யோரை நேர­டி­யா­கச் சென்று சந்­தித்து, அவர்­க­ளது பிரச்­சி­னை­க­ளைக் கேட்டு தெரிந்­து­கொள்­ளும் வாய்ப்பு மாண­வர்­க­ளுக்கு இரண்­டாம் நாளன்று கிட்­டி­யது.

இத்­த­கைய சமூக சிக்­கல்­க­ளைக் களை­வ­தற்­கான வழி­முறை­க­ளை­யும் தீர்­வு­க­ளை­யும் மூன்­றாம் நாளன்று விரி­வான திட்­டங்­க­ளின் மூலம் முன்­வைத்­த­னர் மாண­வர்­கள்.

"பள்ளி முகாம்­க­ளைப் போலன்றி, வேறு­பட்ட, முழு­மை­யான ஓர் அனு­ப­வத்­தைத் தர நாங்­கள் முயற்சி செய்­தி­ருந்­தோம். சுய பரி­சீ­லனை, பிர­தி­பலிப்பு ஆகி­ய­வற்­றுக்­கும் ஒவ்­வொருநாளும் நேரம் ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தது. இதன் மூலம், மாண­வர்­க­ளி­டத்­தில் தன்­னம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­த­வும் வச­தியோ வரு­மா­னமோ இல்­லாத சூழ்­நி­லை­யி­லும் சமூக சேவை­யில் ஈடு­ப­ட­லாம் என்ற கருத்தை வலி­யு­றுத்­த­வும் இந்த கருத்­த­ரங்கு உத­வி­யது," என்­றார், நிகழ்ச்சி மற்­றும் இயக்க நிர்­வாகி சையட் அலி ஃபாத்திமா.

செய்தி: ஆ. விஷ்ணு வர்­தினி