பட்டக்கல்வி-தொழில்கல்வி படித்தோர்: சம்பள இடைவெளி குறைய வேண்டும்

பட்டக்கல்வி-தொழில்கல்வி படித்தோர்: சம்பள இடைவெளி குறைய வேண்டும்

2 mins read
0dfcd3e6-c85c-4cba-b2eb-1628c69949f4
ஆரம்­ப­நிலை ஊதி­யம், தொழில் முன்­னேற்­றம் போன்ற பிரச்­சி­னை­க­ளைக் களைய வேண்­டும் என்­றார் திரு வோங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பட்­டப்­ப­டிப்பு படித்­த­வர்­க­ளின் ஆரம்­பச் சம்­ப­ளத்­துக்­கும் பல­து­றைத்­தொ­ழில்­கல்வி மற்­றும் தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கத்­தில் படித்து முடித்­த­வர்­க­ளின் ஆரம்­ப­நி­லைச் சம்­ப­ளத்­துக்­கும் இடை­யி­லான இடை­வெ­ளி­யைக் குறைக்க சிங்­கப்­பூர் இன்­னும் அதிக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் கூறி­யுள்­ளார்.

பல்­க­லைக்­க­ழ­கப் பட்­ட­தா­ரி­க­ளின் இடை­நிலை ஆரம்­பச் சம்­ப­ளம், தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கத்­தில் படித்­த­வர்­க­ளின் சம்­ப­ளத்­தை­விட இரட்­டிப்­பா­க­வும் பல­து­றைத் தொழில்­கல்­லூ­ரி­யில் படித்­த­வர்­க­ளை­விட 50 விழுக்­காடு அதி­க­மா­க­வும் உள்­ளது என்­றும் துணைப் பிர­த­மர் குறிப்­பிட்­டார்.

சம்­பள ஏற்­றத்­தாழ்வு கடந்த பத்­தாண்­டு­களில் குறைந்து வந்­த­போ­தும், சிங்­கப்­பூர் வேலை­க­ளுக்கு ேமலும் நியா­ய­மான, சம­நி­லை­யான முறை­யில் ஊதி­யம் அளிப்­ப­தன் அவ­சி­யத்தை திரு வோங் சுட்­டிக்­காட்­டி­னார்.

வேலை­கள் தொடர்­பாக கொள்கை ஆய்­வுக் கழ­கத்­தில் நடந்த மாநாட்­டில் துணைப் பிர­த­மர் நேற்று உரை­யாற்­றி­னார்.

சம்­ப­ளங்­களில் சில வேறு பாடு­கள் இருந்­தா­லும், அதிக இடை­வெ­ளி­யால் பிரச்­சி­னை­கள் ஏற்­ப­ட­லாம் என்­றார் அவர்.

சிலர் தாங்­கள் படித்த துறை­களில் வேலைக்­குச் செல்­வ­தில்லை. சிலர் தங்­கள் திறன்­க­ளுக்­கும், விருப்­பத்­துக்­கும் ஏற்­பில்­லாத துறை­யில் பட்­டக்­கல்வி பயி­லும் அழுத்­தத்­தில் இருக்­க­லாம் என்­றார் திரு வோங்.

"சரி­யான திறன்­கள் கொண்ட சரி­யான ஆள்­களை சரி­யான வேலை­களில் அமர்த்­து­வது சிக்­க­லா­கிறது. இது­வெல்­லாம் சேர்ந்து எலி­யோட்­ட­மும் ஏட்­டுக் கல்­விச் சான்­றி­தழ்­க­ளைத் துரத்­திச் செல்­வ­தும் தொட­ரும் உணர்வை அதி­க­மாக்­கு­கிறது. இவற்­றால் சிங்­கப்­பூ­ரர்­க­ளின் கவ­லை­களும் பதற்­ற­மும் கூடு­கிறது," என்று திரு வோங் விவ­ரித்­தார்.

"இவற்றை சரி­செய்­யா­விட்­டால். மக்­கள் கோபம் அடை­ய­லாம். அல்­லது இங்­குள்ள கட்­ட­மைப்பு நியா­ய­மற்­றது என்று நினைக்­க­லாம். அத­னால் மற்ற சில நாடு­க­ளைப்­போல இங்­கும் சமூக ஒற்­றுமை குலை­யக்­கூ­டும்," என்று அவர் எச்­ச­ரித்­தார்.

எனவே, சிங்­கப்­பூர் தர­மான வேலை­களில் முத­லீடு செய்ய வேண்­டும். ஒவ்­வொரு வேலைத் துறை­யை­யும் நடை­மு­றைக்கு ஏற்­ற­தாக உரு­வாக்க வேண்­டும். ஒவ்­வொரு பாதை­யை­யும் பய­னுள்­ள­தாக்க வேண்­டும். இதன் பகு­தி­யாக தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கம், பல­து­றைத் தொழில்­கல்­லூ­ரி­களில் படித்­த­வர்­க­ளுக்­கான வேலை­களில் சிங்­கப்­பூர் கவ­னம் செலுத்த வேண்­டும் என்று திரு வோங் கூறி­னார்.

அத்­த­கைய மாண­வர்­கள் தொழில்­து­றை­களில் அனு­ப­வம் பெறு­வ­தற்­கும் தாங்­கள் தேர்­வு­செய்த துறை­யில் வேலை செய்து கொண்டு படிக்­கும் வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்­தித் தர­வும் வர்த்­தக நிறு­வ­னங்­க­ளு­டன் சேர்ந்து பணி­யாற்ற வேண்­டும்.

ஆரம்­ப­நிலை ஊதி­யம், தொழில் முன்­னேற்­றம் போன்ற பிரச்­சி­னை­க­ளைக் களைய வேண்­டும் என்­றார் திரு வோங்.