தனியார் வீடுகளின் விற்பனை 14 ஆண்டுகள் காணாத சரிவு

தனியார் வீடுகளின் விற்பனை 14 ஆண்டுகள் காணாத சரிவு

2 mins read
a6ad4a0d-c6e5-451c-9588-78f8c3ebff65
-

புதிய தனி­யார் வீடு­க­ளின் விற்­பனை டிசம்­ப­ரில் 14 ஆண்­டு­களில் இல்­லாத அள­விற்கு குறைந்­தது. குறைந்த புது காண்­டோ­மீ­னிய அறி­மு­கம், உய­ரும் வட்டி விகி­தங்­கள், 2023ல் புதிய திட்­டங் களுக்­குக் காத்­தி­ருப்­போர் போன்­றவை நில­வி­ய­போ­தும் இச்­ச­ரிவு ஏற்­பட்­டுள்­ளது.

எக்­ஸி­கி­யூட்­டிவ் காண்­டோ­மீ­னிய வீடு­கள் தவிர்த்து, சொத்து மேம்­பாட்­டா­ளர்­கள் டிசம்­ப­ரில் 170 வீடு­களை விற்­பனை செய்­த­தாக நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யம் நேற்று கூறி­யது. நவம்­பரில் விற்­ப­னை­யான 260 வீடு­க­ளு­டன் ஒப்­பி­ட்டால் இது 34.6% குறைவு.

உல­கப் பொரு­ளி­யல் நெருக்­கடி கார­ண­மாக 2009 ஜன­வ­ரி­யில் 108 வீடு­கள் விற்­பனை ஆகின. அதன் பிறகு தனி­யார் வீட்டு விற்­பனை இவ்­வ­ளவு குறைந்­தது இதுவே முதன்­முறை.

ஆண்­டுக்கு ஆண்டு அடிப்­ ப­டை­யில் 2021 டிசம்­ப­ரில் 650 வீடு­கள் விற்­கப்­பட்­டன. அதை ஒப்­பி­டும்­போது சென்ற மாதம் 74 விழுக்­காடு சரிவு ஏற்­பட்­டது.

டிசம்­ப­ரில் 45 காண்­டோ­மீ­னிய வீடு­களே அறி­மு­கம் கண்­டன.

2007இல் நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யம் சந்­தைப் புள்­ளி­வி­வ­ரங்­களை வெளி­யி­டத் தொடங்­கி­ய­தி­லி­ருந்து இதுவே மிகக் குறைந்த எண்­ணிக்கை ஆகும்.

ஆண்­டுக்கு ஆண்டு அடிப் படை­யில், 2021 டிசம்­ப­ரில் அறி­மு­க­மான 383 வீடு­க­ளு­டன் ஒப்­பி­டும்­போது இது 88.3% குறைவு.

எனி­னும் எக்­ஸி­கி­யூட்­டிவ் காண்­டோ­மீ­னிய வீடு­களை உள்­ள­டக்­கும்­போது டிசம்­பரில் 638 தனியார் வீடுகள் விற்கப்பட்டன. நவம்­ப­ரில் விற்­ப­னை­யான 446 வீடு­க­ளை­விட இது 43% அதி­கம்.

2022 முழு­வ­தும், புதிய வீடு­ க­ளின் விற்­பனை, எக்­ஸி­கி­யூட்­டிவ் காண்­டோ­மீ­னிய வீடு­கள் தவிர்த்து, 45 விழுக்­காட்­டுக்­கும் அதிகமாகக் குறைந்­தது. அத்­த­கைய 7,153 புதிய தனி­யார் வீடு­களே விற்­பனை ஆகின. 2008ல் அத்தகைய 4,264 புதிய தனியார் வீடுகள் விற்கப்பட்டன. அதற்கு அடுத்து இதுவே ஆகக் குறைந்த எண்­ணிக்­கை­யா­கும்.

குறை­வான புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டது, இரண்டு சொத்து விலை தணிப்பு நட­வ­டிக்­கை­கள், நிச்­ச­ய­மற்ற பொரு­ளி­யல் சூழ­லில் அதிகரிக்கும் வட்டி விகி­தங்­கள் ஆகி­யவை இதற்­குக் கார­ணம் என்று கவ­னிப்­பா­ளர்­கள் தெரி­வித்­த­னர்.