2025க்குள் சுற்றுப்புற சேவைகள் துறையின் தரநிலை உயர்வு

2 mins read
02be4175-e127-4c2d-ab25-7363bac3f674
வரும் 2025ஆம் ஆண்­டுக்­குள் சுற்­றுப்­புற சேவை­கள் தொழில்­து­றை­யின் உற்­பத்­தித் திறனை மேம்­ப­டுத்தி, தர­நி­லை­களை உயர்த்­தும் புதுப்­பிக்­கப்­பட்ட திட்­டத்தை தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் நேற்று வெளி­யிட்­டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

துப்­பு­ரவு, கழி­வுப்­பொ­ருள் சேக­ரிப்பு, பூச்­சிக்­கொல்லி மேலாண்மை பணி­க­ளைக் கவ­னிக்­கும் சில நிறு­வ­னங்­களில், ஊழியர் பற்­றாக்­குறை நில­வி­னா­லும் சுற்­றுப்­பு­றம் தொடர்­பான ஒரு சேவைக்கு அப்­பால் தங்­கள் சேவை­களை விரி­வுப்­படுத்­திக்­கொள்ள அவை ஊக்­கு­விக்­கப்­படு­கின்­றன.

வரும் 2025ஆம் ஆண்­டுக்­குள் சுற்­றுப்­புற சேவை­கள் தொழில்­து­றை­யின் உற்­பத்­தித் திறனை மேம்­ப­டுத்தி, தர­நி­லை­களை உயர்த்­தும் புதுப்­பிக்­கப்­பட்ட திட்­டத்தை தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் நேற்று வெளி­யிட்­டது. அதில் மேற்­கூ­றப்­பட்ட நோக்­க­மும் இடம்­பெற்­றுள்­ளது.

போது­மான வளங்­க­ளைக் கொண்ட நிறு­வ­னங்­க­ளின் ஆற்­றல்­களை மேம்­ப­டுத்த வாரி­யம் எண்­ணம் கொண்­டுள்­ளது. அப்போது அவற்­றில் 10% நிறு­வ­னங்­கள் தாங்­கள் வழங்­கும் சேவைக்கு அப்­பால் பல சேவை­களை வழங்­கும் வகை­யில் விரி­வாக்­கம் பெற்­றி­ருக்­கும்.

கொவிட்-19 பெருந்­தொற்று கார­ண­மாக, ஊழி­ய­ரணி பற்­றாக்­கு­றையை இத்­துறை எதிர்­நோக்­கிக்­கொண்­டி­ருக்­கும் இவ்­வே­ளை­யில், புதுப்­பிக்­கப்­பட்ட திட்­டம் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. 2020ல் துப்­பு­ர­வா­ளர்­கள், கழி­வுப்­பொ­ருள் சேக­ரிப்பு, ஊழி­யர்­கள் மலே­சி­யா­வுக்­குத் திரும்பி விட்­ட­னர்.

இதன் கார­ண­மாக மனித உழைப்பை அதி­கம் சார்ந்­தி­ருந்த இத்­துறை, இயந்­திர மனித துப்­பு­ர­வுச் சாத­னங்­கள் போன்ற தொழில்­நுட்ப உத்­தி­யைக் கையில் எடுத்­தது.

தேசிய சுற்­றுப்­புற வாரி­யத்­தின் தொழில்­து­றையை உரு­மாற்­றும் புதுப்­பிக்­கப்­பட்ட திட்­டம் மூலம் 2025க்குள் நிபு­ணர்­கள், மேலா­ளர்­கள், நிர்­வா­கி­கள், தொழில்­நுட்­பர்­கள் ஆகி­யோ­ருக்­கான மேலும் 1,600 வேலை­கள் உரு­வாக்­கப்­படும்.

தரவு பகுப்­பாய்­வா­ளர்­கள், நீடித்த நிலைத்­தன்மை மேலா­ளர்­கள் போன்ற வேலை­களும் அதில் அடங்­கும்.

சுற்­றுப்­புற சேவை­கள் தொழில்­து­றை­யின் உரு­மாற்­றத் திட்­டம் 2025 நிகழ்ச்­சி­யில் பேசிய சுற்­றுப்­புற, நீடித்த நிலைத்­தன்மை மூத்த துணை அமைச்­சர் கோ போ கூன், "சுற்­றுப்­புற சேவை­கள் தொழில்­துறை சார்ந்த தேசிய சவால்­கள், ஆய்வு, மேம்­பாடு, புத்­தாக்­கம் ஆகி­யவை மூலம் மதிப்­பு­கூட்­டப்­பட்ட வாய்ப்பு­களாக மாற்றி அமைக்­கப்­படும்," என்­றார்.

வரும் ஜூலை 1ஆம் தேதி­யி­லி­ருந்து துப்­பு­ரவு, கழி­வுப்­பொ­ருள் சேக­ரிப்பு துறை­க­ளுக்கு படிப்­படி­யான சம்­பள உயர்வு முறை அறி­மு­க­மா­ன­வு­டன், இங்­குள்ள 44,000 ஊழி­யர்­க­ளுக்கு ஊதிய உயர்வு, திறன் மேம்­பாட்டு வாய்ப்பு­கள் வழங்­கப்­படும் என்­றும் டாக்­டர் கோ கூறி­னார்.

சுற்­றுப்­பு­றத் தொழில்­து­றை­யில் தற்­போது 1,700 நிறு­வ­னங்­களில் 71,000க்கும் மேற்­பட்ட ஊழி­யர்கள் வேலை செய்­கி­றார்­கள்.