'கோ-அஹெட் சிங்கப்பூர்' நிறுவனத்தின் மேலும் 50 பேருந்துகளில் சூரிய ஒளித் தகடுகள்

'கோ-அஹெட் சிங்கப்பூர்' நிறுவனத்தின் மேலும் 50 பேருந்துகளில் சூரிய ஒளித் தகடுகள்

2 mins read
f7d39efe-3716-48c4-a35a-c3c5ea6814bf
-

பொதுப் பேருந்து நடத்­து­ந­ரான கோ-அஹெட் சிங்­கப்­பூர் நிறு­வனம் மேலும் தனது 50 பேருந்­து­களின் மேல் கூரை­யில் மிக­வும் மெலி­தான சூரிய ஒளித் தக­டு­க­ளைப் பொருத்­த­வுள்­ளது. கடந்த ஆண்டு நடத்­தப்­பட்ட முன்­னோட்ட சோதனை வெற்றி பெற்ற பிறகு, இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

வரும் ஏப்­ரல் மாத இறு­திக்­குள் மொத்­தம் 52 டீசல் பேருந்­து­களில் 1.6 மில்­லி­மீட்­டர் தடி­மா­ன­முள்ள சூரிய ஒளித் தக­டு­கள் பொருத்­தப்­படும். இந்­தப் பேருந்­து­கள் அதன் 31 சேவை­களில் ஓட­விடப்­படும் என்று நேற்று தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­தப் பேருந்­து­கள் எந்­த­வொரு தனிச் சேவைக்கும் ஒதுக்­கப்­ப­டாது. கோ-அஹெட் சிங்­கப்­பூர் நிறு­வ­னம் வைத்­தி­ருக்­கும் 450 பேருந்­து­களில் 11% பேருந்­து­களில் மட்­டுமே இத் தகடுகள் பொருத்­தப்­படும்.

52 பேருந்­து­க­ளி­லும் சூரிய ஒளித் தக­டு­கள் பொருத்­தப்­பட்­ட­வு­டன், கரிம வெளி­யேற்­றம் ஆண்­டுக்கு 200 டன் குறைக்­கப்­படும் என்று அந்­நி­று­வ­னம் தெரி­வித்­தது. இது 43 பய­ணி­கள் கார் வெளி­யேற்­றும் கரிம வெளி­யேற்­றத்­துக்­குச் சம­மா­னது.

பேருந்­தின் மேல்­கூ­ரை­யில் பொருத்­தப்­படும் சூரிய ஒளித் தகடு ஒன்று 20 கிலோ­கி­ராம் எடை கொண்­டது. அது 1,000 வாட் எரி­சக்­தியை உற்­பத்தி செய்­யக்­கூ­டி­யது. இது சிறிய சமை­ய­லறை அடுப்­புக்­குத் தேவை­யான எரி­சக்­திக்கு ஒப்­பா­னது.

சூரிய ஒளித் தகடு, பேருந்­தின் மின்­க­லத்­தில் மின்­னூட்­டம் செய்து, எரி­பொ­ருளை மிச்­சப்­படுத்­து­கிறது.

பேருந்து இயந்­தி­ரம் முடக்­கப்­படும்­போது, பேருந்­தின் மின்­க­லம் பேருந்து இயக்­கத்­துக்கு உத­வும், பேருந்­துக்கு எரி­சக்தி கொடுக்­கும்.

கடந்த ஆண்டு நடத்­தப்­பட்ட முன்­னோட்ட சோத­னை­யில், ஆண்­டுக்கு 3% முதல் 4% வரை எரி­பொ­ரு­ளைச் சேமிக்க முடிந்­தது என்று அந்நிறுவனம் தெரி­வித்­தது.

இது, ஓர் ஆண்­டில் ஒரு பேருந்திலிருந்து வெளியாகும் 3.7 முதல் 4 டன் கரிம வெளி­யேற்­றத்­துக்­குச் சமம்.

முத­லில் ஆறு மாதங்­க­ளுக்கு நடத்­தப்­ப­ட­வி­ருந்த சோதனை, கூடு­தல் தர­வு­க­ளைப் பகுப்­பாய்வு செய்­வ­தற்­காக நீட்டிக்­கப்­பட்­டது என்­றும் கோ-அஹெட் சிங்­கப்­பூர் கூறி­யது.

2040ஆம் ஆண்­டுக்­குள் பேருந்துகளில் 100 விழுக்காடு சுத்­த­மான எரி­சக்தியைப் பயன்படுத்தும் சிங்­கப்­பூ­ரின் இலக்குக்கு தமது நிறு­வ­னம் முழுமையான கடப்­பாடு கொண்­டுள்­ளது என்று கோ-அஹெட் சிங்­கப்­பூர் நிறு­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் ஆண்ட்ரூ தாம்­சன் தெரி­வித்­தார்.