அடிதடியில் ஈடுபட்ட இளையர்கள்

அடிதடியில் ஈடுபட்ட இளையர்கள்

1 mins read
883856a9-0081-422c-bb93-8a0ced114197
உதை விட்­ட­வரை மூன்­றா­ம­வர் மடக்­கிப் பிடித்­த­தைத் தொடர்ந்து மீண்­டும் அடி­தடி ஏற்­பட்­டது. இம்­முறை அதில் மேலும் பலர் ஈடு­பட்­ட­னர். இளையர்களுக்கு இடையே அடிதடி ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. படம்: பிக்ஸாபே -

பூன் கெங்­கில் பதின்ம வயது இளை­யர்­கள் சிலர் அடி­த­டி­யில் ஈடு­ப­டு­வ­தைக் காட்­டும் காணொளி ஒன்று இம்மாதம் 13ஆம் தேதி முதல் சமூக ஊடகங்களில் பரவி வரு­கிறது. இளை­யர்­கள் ஒரு­வரை ஒரு­வர் அடித்­துக்­கொண்டு வாக்­கு­வாதத்­தில் ஈடு­பட்­டது தெரி­கிறது. காலாங் சமூக மன்­றத்­திற்கு அரு­கில் இருக்­கும் கூடைப்­பந்­து மைதானத்தில் சண்டை மூண்­டது.

குறைந்­தது ஓர் இளை­ய­ரே­னும் பள்­ளிச் சீரு­டை­யில் இருப்­ப­தா­கத் தெரி­கிறது. இது­கு­றித்து கருத்­து­ரைக்க கல்வி அமைச்சை ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்­பு­கொண்­டுள்­ளது.

இந்­தக் காணொ­ளி­யில், இளை­யர்­கள் இரு­வர் ஒரு­வரை ஒருவர் அடித்­துக்­கொண்­ட­பின் சண்டை முடி­வுக்கு வரு­வ­தைக் காண முடி­கிறது. அவர்­க­ளைச் சுற்­றி­யி­ருந்த ஏறக்­கு­றைய 12 இளை­யர்­கள் வேடிக்கைப் பார்த்­துக்­கொண்­டி­ருந்­த­னர்.

ஆனால், உதை விட்­ட­வரை மூன்­றா­ம­வர் மடக்­கிப் பிடித்­த­தைத் தொடர்ந்து மீண்­டும் அடி­தடி ஏற்­பட்­டது. இம்­முறை அதில் மேலும் பலர் ஈடு­பட்­ட­னர். இளையர்களுக்கு இடையே அடிதடி ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.

இந்நிலையில், ஊடகங்களின் கேள்விகளுக்கு நேற்று பதிலளித்த காவல்துறை, இந்தச் சண்டை குறித்து தன்னிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதுகுறித்து தான் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தது.