'அரசியல் சூழலுக்கு அப்பால் இணைந்து பணியாற்றுக'

'அரசியல் சூழலுக்கு அப்பால் இணைந்து பணியாற்றுக'

2 mins read
1af31504-42c4-4e7a-88bc-7c749c692001
-

உலகளாவிய அறிவியல் சமூகத்தினருக்கு துணைப் பிரதமர் ஹெங் கோரிக்கை

நாடு­க­ளுக்கு இடை­யி­லான உற­வு­கள் எப்­ப­டி­யி­ருந்­தா­லும் அறிவு மேம்­பாடு தொடர்­பில் உல­க­ளா­விய அறி­வி­யல் சமூ­கம் ஒத்­து­ழைக்க வேண்­டும் என்று துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் வலி­யுறுத்­தி­யுள்­ளார்.

சிங்­கப்­பூர் தொழில்நுட்ப, வடி­வ­மைப்­புப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் நடை­பெ­றும் உலக இளம் விஞ்­ஞா­னி­கள் உச்­ச­நிலை மாநாடு 2023ல் நேற்று அவர் உரை­யாற்­றி­னர்.

பல்­க­லைக்­க­ழ­கம் 11வது முறை­யாக ஏற்­பாடு செய்­துள்ள இந்த மாநாடு நாளை மறு­நாள் வரை நடை­பெ­ற­வி­ருக்­கிறது. இதில் சிறப்­பு­ரை­யாற்­றிய திரு ஹெங், வல்­ல­ர­சு­க­ளுக்கு இடை­யி­லான போட்­டா­போட்­டி­யும் வாக்­கு­வா­த­மும் அதி­க­ரித்­த­தால் சில துறை­களில் ஒத்­து­ழைப்பு குறைந்­தி­ருக்­கிறது அல்­லது முடங்­கி­விட்­டது என்று குறிப்­பிட்­டார்.

இத்­த­கைய சூழ­லில், உல­கின் ஆகச் சிறந்த அறி­வா­ளி­களை ஒன்­றி­ணைக்­கும் ஆற்­றல் அறி­வி­ய­லுக்கு உண்டு என்­றார் அவர். இவர்­கள் இணைந்து ஆய்வு மேற்­கொள்­ள­லாம். உலகை அச்­சு­றுத்­தும் சவால்­களுக்­குத் தீர்­வு­கா­ண­லாம். எந்த நாட்­டைச் சேர்ந்­த­வர்­கள், எத்­த­கைய அர­சி­யல் நம்­பிக்­கை­களைக் கொண்­டி­ருப்­ப­வர்­கள் என்ற பேதங்­க­ளுக்கு அப்­பால் ஒத்­து­ழைக்க இவர்­கள் முன்­வ­ர­வேண்­டும் என்று துணைப் பிர­த­மர் கேட்­டுக்­கொண்­டார்.

எடுத்­துக்­காட்­டாக சென்ற ஆண்டு இயற்­பி­ய­லில் நோபெல் பரிசு வாங்­கிய மூவ­ரைத் திரு ஹெங் சுட்­டி­னார்.

இயற்­பி­யல் மேதை­க­ளான ஆலன் ஆஸ்­பெக்ட், ஜான் கிளா­சர், ஆண்­டன் ஸெய்­லிங்­கெர் மூவ­ரும் முறையே பிரான்S, அமெ­ரிக்கா, ஆஸ்தி­ரியா ஆகிய நாடு­க­ளைச் சேர்ந்­த­வர்­கள்.

"இவ்­வாறு வெவ்­வேறு கலா­சா­ரங்­கள், நாடு­கள், சம­யங்­கள் போன்­ற­வற்­றைச் சார்ந்­த­வர்­களைப் பொது நன்­மைக்­காக இணைக்­கும் ஆற்­றல் அறி­வி­ய­லுக்கு உண்டு என்­ப­து­தான் அதன் அழகே," என்­றார் திரு ஹெங்.

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைத் திறம்­ப­டச் சமா­ளிப்­ப­தில் அறி­வி­யல் சமூ­கத்­தின் பங்­களிப்பு முக்­கி­ய­மா­னது என்­பதை அவர் குறிப்­பிட்­டார். இந்த வகை­யில் அனைத்­து­லக அறி­வி­யல் சமூ­கம் மனி­த­கு­லத்­துக்­கான நம்­பிக்­கை­யைக் கைகளில் ஏந்­தி­யுள்­ளது என்­றார் திரு ஹெங்.

மாநாட்­டில், 21 புகழ்­பெற்ற விஞ்­ஞா­னி­க­ளின் உரை­கள் இடம்­பெ­ற­வி­ருக்­கின்­றன. இவர்­களில் நோபெல் உள்­ளிட்ட அனைத்­து­லக அள­வில் புகழ்­பெற்ற பரி­சு­களை வென்­ற­வர்­களும் அடங்­கு­வர்.

கடந்த ஈராண்­டு­க­ளாக மெய் நிகர் முறை­யில் இம்மா­நாடு நடைபெற்­றது. இவ்­வாண்டு இதில் 29 நாடு­க­ளைச் சேர்ந்­த 350 பேர் நேர­டி­யா­க­வும் 1,400 பேர் இணை­யம் வாயி­லா­க­வும் பங்­கேற்­கின்­ற­னர்.