சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோபின் அழைப்பை ஏற்று உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்காட் மிர்ஸியோயெவ் இங்கு அதிகாரபூர்வ வருகை புரிந்துள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையிலான அரசதந்திர உறவு தொடங்கி, சென்ற ஆண்டுடன் 25 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் அந்நாட்டு அதிபரை முதல்முறையாக நேரில் சந்திப்பது மகிழ்ச்சி அளிப்பதாகப் பிரதமர் லீ சியன் லூங் கூறினார். இருதரப்பும் ஆசியாவில் நிலைத்தன்மை, அமைதி எனும் பொது நோக்கங்களைக் கொண்டுள்ளன என்று திரு லீ ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டார்.
மனிதவள மேம்பாடு தொடர்பில் சிங்கப்பூரின் அனுபவங்களைத் தாம் அவருடன் பகிர்ந்துகொண்டதாகவும் வட்டார, உலகளாவிய மேம்பாடு குறித்துக் கலந்துரையாடியதாகவும் பிரதமர் கூறினார்.

