பிரதமரைச் சந்தித்தார் உஸ்பெகிஸ்தான் அதிபர்

பிரதமரைச் சந்தித்தார் உஸ்பெகிஸ்தான் அதிபர்

1 mins read
d6494829-9480-459f-afca-e93ab00b740a
-

சிங்­கப்­பூர் அதி­பர் ஹலிமா யாக்­கோ­பின் அழைப்பை ஏற்று உஸ்­பெ­கிஸ்­தான் அதி­பர் ஷவ்­காட் மிர்­ஸி­யோ­யெவ் இங்கு அதி­கா­ர­பூர்வ வருகை புரிந்­துள்­ளார்.

இரு நாடு­க­ளுக்கு இடை­யி­லான அர­ச­தந்­திர உறவு தொடங்கி, சென்ற ஆண்­டு­டன் 25 ஆண்­டு­கள் நிறை­வு­பெற்­றுள்ள நிலை­யில் அந்­நாட்டு அதி­பரை முதல்­மு­றை­யாக நேரில் சந்­திப்­பது மகிழ்ச்சி அளிப்­ப­தா­கப் பிர­த­மர் லீ சியன் லூங் கூறி­னார். இரு­த­ரப்­பும் ஆசி­யா­வில் நிலைத்­தன்மை, அமைதி எனும் பொது நோக்­கங்­க­ளைக் கொண்­டுள்­ளன என்று திரு லீ ஃபேஸ்புக்­கில் குறிப்­பிட்­டார்.

மனி­த­வள மேம்­பாடு தொடர்­பில் சிங்­கப்­பூ­ரின் அனு­ப­வங்­களைத் தாம் அவ­ரு­டன் பகிர்ந்து­கொண்­ட­தா­க­வும் வட்­டார, உல­க­ளா­விய மேம்­பாடு குறித்­துக் கலந்­து­ரை­யா­டி­ய­தா­க­வும் பிர­த­மர் கூறி­னார்.