எண்ணெய் சாராப் பொருள்களின் ஏற்றுமதி சென்ற மாதம் 20.6% குறைந்தது

எண்ணெய் சாராப் பொருள்களின் ஏற்றுமதி சென்ற மாதம் 20.6% குறைந்தது

1 mins read
d1efeeba-139f-45e4-a98f-413af1f47c0f
-

சிங்­கப்­பூ­ரின் முக்­கிய ஏற்­று­மதி சென்ற மாதம் தொடர்ந்து மூன்­றா­வது மாத­மா­கக் குறைந்­தது. எண்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் அமைப்பு நேற்று வெளி­யிட்ட புள்ளி­வி­வ­ரங்­கள் இதைக் காட்­டு­கின்­றன.

எண்­ணெய் சாரா உள்­நாட்டு உற்­பத்­திப் பொருள்­க­ளின் ஏற்­று­மதி ஓராண்­டுக்கு முன்­பு­டன் ஒப்­பி­டு­கை­யில் 20.6 விழுக்­காடு குறைந்­தது. முன்­ன­தாக அது 16.8 விழுக்­காடு குறை­யு­மென புளூம்­பெர்க் முன்­னு­ரைத்­தி­ருந்­தது. நவம்­பர் 2022ல் அது 14.7 விழுக்­கா­டா­கப் பதி­வா­னது.

இருப்­பி­னும் சென்ற ஆண்டு முழு­மைக்­கும் எண்­ணெய் சாராப் பொருள்­க­ளின் ஏற்­று­மதி 3 விழுக்­காடு அதி­க­ரித்­த­தா­கக் கூறப்­பட்­டது. முன்­ன­தாக அது 6 விழுக்­கா­டாக இருக்­கு­மென முன்­னு­ரைக்­கப்­பட்­டி­ருந்­தது.

சென்ற மாதம் மின்­ன­ணுப் பொருள்­கள், மின்­னணு சாராப் பொருள்­கள் என இரு பிரி­வு­க­ளி­லும் ஏற்­று­ம­தி­யில் ஈரி­லக்­கக் குறைவு பதி­வா­னது.

மின்­ன­ணுப் பொருள்­க­ளின் ஏற்­று­மதி 17.9 விழுக்­காடு குறைந்­தது. மின்­னணு சாராப் பொருள்­களின் ஏற்­று­மதி 21.3 விழுக்­காடு குறைந்­தது.

சிங்­கப்­பூ­ரின் ஏற்­று­ம­திப் பட்டி­ய­லில் முன்­னணி வகிக்­கும் பத்து வட்­டா­ரங்­க­ளுக்­கும் ஏற்­று­மதி குறைந்­தது. குறிப்­பாக சீனா, ஹாங்­காங், இந்­தோ­னீ­சியா ஆகி­ய­வற்­றுக்­கான ஏற்­று­மதி 30 முதல் 35 விழுக்­கா­டு­வரை சரிந்­தது. தென்­கொ­ரியா, ஜப்­பான் ஆகிய நாடு­க­ளுக்கு ஏற்­று­மதி அதி­கரித்­த­தா­கக் கூறப்­படுகிறது.

ஆண்டு அடிப்­ப­டை­யில், சென்ற மாதத்­துக்­கான மொத்த வர்த்­த­கம் 7.7 விழுக்­காடு வீழ்ச்சி­கண்­டது. இருப்­பி­னும் சென்ற ஆண்டு முழு­மைக்­கும் சிங்கப்பூரின் ஒட்டுமொத்த வர்த்­த­கம் 17.7 விழுக்­காடு வளர்ச்­சி­ய­டைந்­தது. அதன் மதிப்பு $101.3 பில்­லி­யன்.