இந்தோனீசிய நாடாளுமன்றம் சிங்கப்பூருடனான மூன்று முக்கிய ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளித்திருப்பது இருதரப்பு உறவின் வலிமை, முதிர்ச்சி ஆகியவற்றைக் காட்டுவதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.
இந்த ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதன் தொடர்பில் இந்தோனீசியாவுடன் இணைந்து பணியாற்ற சிங்கப்பூர் ஆர்வமுடனிருப்பதாக அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
தப்பியோடும் குற்றவாளிகளைத் திரும்ப ஒப்படைத்தல், தற்காப்பு ஒத்துழைப்பு, வட்டாரத்தில் விமானப் போக்குவரத்துத் தகவல்களைப் பகிர்தல் ஆகியவை தொடர்பான உடன்படிக்கைகள் இவை.
சிங்கப்பூர் இவை தொடர்பிலான சட்ட நடவடிக்கைகளை நிறைவுசெய்திருப்பதாகவும் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
இருநாடுகளும் இவ்வாறு இணக்கம் கண்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகப் பிரதமர் லீ சியன் லூங் நேற்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.

