எரிசக்தி, உற்பத்தி, தளவாடத் துறை சார்ந்த நிறுவனங்கள் ஆக அதிக வளர்ச்சி கண்டன

எரிசக்தி, உற்பத்தி, தளவாடத் துறை சார்ந்த நிறுவனங்கள் ஆக அதிக வளர்ச்சி கண்டன

2 mins read
904da584-6e22-432c-a56b-fd2ad12740b9
-

சிங்­கப்­பூ­ரில் ஆக அதிக வளர்ச்சி­கா­ணும் நிறு­வ­னங்­க­ளின் பட்­டி­ய­லில் நிதித் தொழில்­நுட்­பம், மின்­வர்த்­த­கம், தக­வல் தொழில்­நுட்­பம் போன்ற துறை­க­ளைச் சார்ந்த நிறு­வ­னங்­கள் தொடர்ந்து இடம்­பெ­றும் வேளை­யில், எரி­சக்தி, பய­னீட்­டுத்­துறை போன்­றவை சார்ந்த நிறு­வ­னங்­கள் பட்­டி­ய­லில் முன்­னணி வகிப்­ப­தா­கக் கூறப்­பட்­டுள்­ளது.

உல­க­ளா­விய ஆய்வு நிறு­வ­ன­மான ஸ்டே­டிஸ்­டா­வும் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சும் இணைந்து தொகுத்த அந்­தப் பட்­டி­ய­லில் இங்கு ஆக அதிக வளர்ச்­சி­கண்ட 100 நிறு­வ­னங்­கள் இடம்­பெற்­றுள்­ளன.

நேற்று வெளி­யான அந்­தப் பட்­டி­ய­லில், உற்­பத்தி, போக்­கு­வரத்து, தள­வா­டத்­துறை ஆகி­யவை சார்ந்த நிறு­வ­னங்­கள் கூடு­த­லான எண்­ணிக்­கை­யில் இடம்­பி­டித்­துள்­ளன.

பட்­டி­ய­லில் இடம்­பெற, நிறு­வ­னங்­க­ளின் தலை­மை­ய­கம் சிங்­கப்­பூ­ரில் அமைந்­தி­ருக்க வேண்­டும். மேலும் 2018ல் இவை குறைந்­தது $150,000 வரு­வா­யும் 2021ல் $1.5 மில்­லி­யன் வரு­வா­யும் ஈட்­டி­யி­ருக்­க­ வேண்­டும்.

இந்த ஆண்­டுக்­கான இப்­பட்­டி­ய­லில் எரி­சக்தி, பய­னீட்­டுத் துறை­கள் சார்ந்த ஏழு நிறு­வ­னங்­கள் உள்­ளன. ஒப்­பு­நோக்க, முந்­தைய பட்­டி­ய­லில் இத்­த­கைய மூன்று நிறு­வ­னங்­களே இடம்­பெற்­றி­ருந்­தன.

முழு­மை­யான வளர்ச்சி எனும் அடிப்­ப­டை­யில் பட்­டி­ய­லில் முத­லி­டம் பிடித்­துள்­ளது ரெக்ஸ் இன்­டர்­நே­ஷ­னல் எனும் பன்­னாட்டு எண்­ணெய் நிறு­வ­னம். இது ஓமான், நார்வே, மலே­சியா ஆகி­ய­வற்­றில் உற்­பத்தி உரி­மங்­க­ளைப் பெற்று இயங்­கி­ வ­ரு­கிறது.

யூனி­யன் கேஸ், நிலக்­க­ரிச் சுரங்க நட­வ­டிக்­கை­யில் ஈடு­படும் புதிய நிறு­வ­ன­மான ஜியோ எனர்ஜி ரிசோர்­சஸ், பிஎஸ் எனர்ஜி போன்­ற­வை­யும் பட்­டி­ய­லில் இடம்­பெற்­றுள்­ளன.

இதில் எட்டு தள­வாட, போக்­கு­வ­ரத்து நிறு­வ­னங்­கள் இடம்­பிடித்­துள்­ளன. நிதித் தொழில்­நுட்­பத் துறை சார்ந்த நிறு­வ­னங்­களே ஆக அதிக எண்­ணிக்­கை­யில் பட்­டி­ய­லில் இடம்­பெற்­றுள்­ளன. இத்தகைய 10 நிறுவனங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.