'ஹோம்' அமைப்பின் நிர்வாக இயக்குநர் தற்காலிகப் பணி நீக்கம்

'ஹோம்' அமைப்பின் நிர்வாக இயக்குநர் தற்காலிகப் பணி நீக்கம்

2 mins read
ac390bd7-c11e-4d13-8469-31fbbf161e4f
-

'ஹோம்' எனப்­படும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு உத­வும் சமூ­க­நல அமைப்பு, அதன் நிர்­வாக இயக்­கு­ந­ரான தேஷி கில்­லைத் தற்­கா­லி­க­மாக பணி நீக்­கம் செய்­துள்­ளது.

அந்த அமைப்­பி­லி­ருந்து அவர் நிதி­யைக் கையாண்­ட­தா­கக் குற்­றச்­சாட்­டு­கள் எழுந்­ததை அடுத்து, 'ஹோம்' அந்­ந­ட­வ­டிக்­கையை எடுத்­தது. அது குறித்து ஹோம் தனது சமூக ஊட­கத் தளங்­களில் நேற்று அறிக்கை வெளி­யிட்­டது.

அந்த விவ­கா­ரம் பற்றி சொந்­த­மாக அமைப்பு ரீதி­யி­லான விசா­ர­ணையை மேற்­கொள்­வற்­காக 37 வயது திரு­வாட்டி கில் தற்­கா­லிக பணி நீக்­கம் செய்­யப்­பட்­ட­தாக 'ஹோம்' கூறி­யது.

தவ­றான நடத்­தையை சந்­தே­கிக்க கார­ணம் உள்­ள­தாக முதற்­கட்ட விசா­ர­ணை­யில் தெரிய வந்­துள்­ள­தா­க­வும் அது குறிப்­பிட்­டது.

அதி­கா­ரி­க­ளி­டம் இது­பற்றி ெதரி­வித்­துள்­ள­தா­கக் கூறிய 'ஹோம்', எந்த விசா­ர­ணை­யி­லும் தனது நிர்­வாக மன்­றத்­தி­ன­ரும் ஊழி­யர்­களும் தேவை­யான அனைத்­துத் தக­வல்­க­ளை­யும் வழங்­கு­வர் என்­றும் சொன்­னது.

திரு­வாட்டி கில், சரி­யான ஆவ­ணங்­க­ளைத் தரா­மல் செல­வுக் கணக்­கைக் காட்டி ஹோம் அமைப்­பி­லி­ருந்து பல்­லா­யி­ரம் வெள்­ளி­யைக் கோரிப் பெற்­ற­தாக இணை­யத்­தில் பல்­வேறு குற்­றச்­சாட்­டு­கள் பதி­வி­டப்­பட்­டன.

அதைத் தொடர்ந்தே 'ஹோம்' திரு­வாட்டி கில்லை தற்­கா­லி­க­மா­கப் பணி நீக்­கம் செய்­தது.

இணை­யத்­தில் வெளி­யி­டப்­பட்ட அந்­தக் குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு ஆதா­ரம் ஏதும் வழங்­கப்­ப­ட­வில்லை.

திரு­வாட்டி கில், கடந்த 2017ல் 'ஹோம்' அமைப்­பில் சேர்ந்­தார். 2021 ஜூலை மாதம் அதன் நிர்­வாக இயக்­கு­ந­ராக அவர் நிய­மிக்­கப்­பட்­டார்.

நன்­கொ­டை­கள், மானி­யங்­கள், வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கா­கத் தான் நடத்­தும் பயிற்சி, சமூ­கத் திட்­டங்­க­ளி­லி­ருந்து 'ஹோம்' அதன் நிதி­யைப் பெற்­று­வ­ரு­கிறது. மீண்­டும் இத்­த­கைய தவ­று­கள் நிக­ழா­மல் தடுக்க நிர்­வா­கக் கட்­டுப்­பா­டு­களை மறு­ஆய்வு செய்து வரு­வ­தாக 'ஹோம்' கூறி­யது.