ரெட்ஹில் வட்டாரத்தில் கலவரத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது

ரெட்ஹில் வட்டாரத்தில் கலவரத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது

2 mins read
f31b8162-c4c1-4ec3-88ec-df783874b7cb
-

சட்­ட­வி­ரோ­த­மா­கக் கூடி, பயங்­கர ஆயு­தங்­க­ளு­டன் கல­வ­ரத்­தில் ஈடு­பட்ட சந்­தே­கத்­தின்­பே­ரில் ஒன்­பது பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

இம்­மா­தம் 8ஆம் தேதி இரவு 11.45 மணி­ய­ள­வில் அடுக்­கு­மாடி கார்­நி­றுத்த இடம் ஒன்­றில் நிகழ்ந்த சண்டை குறித்து காவல்­து­றைக்­குத் தக­வல் கிடைத்­தது.

ரெட்­ஹில், ஜாலான் ரூமா திங்கி, புளோக் 37Aவில் அமைந்­துள்ள அந்த கார்­நி­றுத்த இடத்­தில் இரு கும்­பல்­கள் மோதிக்­கொண்­டது முதற்­கட்ட விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­தது. அவர் களுக்கு இடை­யி­லான வாக்­கு­வா­தம் சண்­டை­யாக மாறி­யது.

விசா­ரணை மூல­மா­க­வும் காவல்­து­றைக் கண்­கா­ணிப்­புப் படக்­க­ரு­வி­களில் பதி­வான காட்சி­க­ளின் துணை­யு­ட­னும் ஆட­வர்­கள் அடை­யா­ளம் காணப்­பட்டு, ஒன்­பது பேர் கைதாகினர்.

சண்­டை­யில் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாக நம்­பப்­படும் ரொட்டி வெட்­டும் மூன்று கத்­தி­களையும் கைவி­ரல்­களில் போட்­டுக்­கொள்­ளும் 'நக்­கல்­டஸ்­டர்' என்ற ஆயு­தங்­க­ளை­யும் காவல்­து­றை­ கைப்பற்றியது.

அந்த ஒன்­பது பேரில் ஒரு­வ­ரான 43 வயது இர்­வாந்தோ அப்­துல்­லா­மீது நேற்று நீதி­மன்­றத்­தில் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டது. அவரை நான்கு நாள்­கள் விசா­ர­ணைக் காவ­லில் வைக்­கு­மாறு நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டது. வரும் 20ஆம் தேதி மீண்­டும் அவர் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­ப­டு­வார்.

இதே குற்­றத்­திற்­காக 22 முதல் 59 வய­திற்­குட்­பட்ட நான்கு ஆட­வர்­கள்­மீது கடந்த 10-14 தேதி­க­ளுக்கு இடையே குற்­றம் சுமத்­தப்­பட்­டது. காவல்­துறை விசா­ரணை தொடர்­கிறது.

முகம்­மது அலிஃப் முகம்­மது, சையது முகம்­மது நஸ்மி சையது அப்­துல்லா, முகம்­மது ரிஸால் செனின் ஆகி­யோர் குறித்து தக­வல் தெரிந்­தால் 1800-255-0000 என்ற நேரடி அழைப்பு எண் அல்­லது www.police.gov.sg/i-witness எனும் இணை­யப்­பக்­கம் வழி­யாக தெரி­விக்­கும்­படி காவல்­துறை பொது­மக்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டுள்­ளது.