கொடூரத் தாக்குதல்: ஆடவருக்கு சிறை, பிரம்படி, அபராதம்

கொடூரத் தாக்குதல்: ஆடவருக்கு சிறை, பிரம்படி, அபராதம்

2 mins read
4f727100-5414-44fb-a114-85491af4a3b1
-

தமது உற­வுக்­கா­ரப் பெண்­ணி­ட­மி­ருந்து பிரிந்து வாழ்ந்த அவ­ரது கண­வ­ரு­டன் சேர்ந்­து­கொண்டு, அப்­பெண்­ணின் ஆண் நண்­பரை பொது இடத்­தில் தாக்­கிய ஆட­வ­ருக்கு இரண்­டரை ஆண்டு சிறைத் தண்­ட­னை­யும் நான்கு பிரம்­ப­டி­களும் $5,500 அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டுள்­ளன.

அர­சாங்க வழக்­க­றி­ஞர்­கள் அந்­தத் தாக்­கு­தலை கொடூ­ர­மா­க­வும் எவ்விதக் குற்ற உணர்வும் இல்லாது நடத்­தப்­பட்ட தாக்­கு­தல் என்று வரு­ணித்­தி­ருந்­த­னர்.

தாக்­கு­த­லில் பங்­கு­பெற்ற குற்ற­ வாளி, அவ­ரது தந்தை, அந்த 37 வயது பெண்­ணி­ட­மி­ருந்து பிரிந்து வாழ்ந்த கண­வ­ரும் சேர்ந்து, அப்­பெண்­ணை­யும் அவ­ரது நண்­ப­ரை­யும் தாக்­கி­னர்.

அச்சம்பவத்தில் அந்த 37 வயது பெண்­ணின் நண்­பர் தாக்­கப்­பட்­டார். அவ­ரது ஆடை­கள் கழற்­றப்­பட்டு, அவ­ரது அந்­த­ரங்க உறுப்­பு­கள் காணொளி எடுக்­கப்­பட்­டன. அதில் ஒரு காணொளி, அந்த நண்­ப­ருக்­குத் தெரிந்த 500க்கும் அதி­க­மா­ன­வர்­க­ளுக்கு அனுப்­பப்­பட்­டது.

தாக்­கப்­பட்ட 37 வயது ஆட­வ­ரின் முகத்­தி­லும் வலது பக்­கக் கழுத்­தெ­லும்­பி­லும் எலும்­பு­கள் முறிந்­தன. அவ­ருக்கு 21 நாள்­ மருத்­து­வ­மனை விடுப்பு வழங்­கப்­பட்­டது.

பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் அடை­யா­ளத்­தைப் பாது­காக்க, இந்த வழக்­கில் யாரு­டைய பெய­ரை­யும் வெளி­யிட அனு­மதி இல்லை.

நேற்று தண்­டனை விதிக்­கப்­பட்ட 24 வயது குற்­ற­வாளி, வேண்­டும் என்றே கடும் காயம் விளை­வித்­தது, ஒழுங்­கற்ற முறை­யில் நடந்­து­கொண்­டது, கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் நடப்­பில் இருந்­த­போது வேலை­யி­டத்­தில் ஒன்­பது பேரு­டன் சேர்ந்து போக்­கர் சீட்டு விளை­யா­டி­யது உள்­ளிட்ட பல்­வேறு குற்­றச்­சாட்­டு­களை ஒப்­புக்­கொண்­டி­ருந்­தார்.

குற்­ற­வா­ளி­யின் தந்­தைக்கு எதி­ரான வழக்கு இன்­னும் விசா­ர­ணைக்கு வர­வில்லை.

அத்­தாக்­கு­த­லின்­போது கூட இருந்து படம்பிடித்தவர் குற்­ற­வா­ளி­யின் காத­லி. அவருக்கு கடந்த 2022ஆம் ஆண்டு ஜன­வரி 7 அன்று, ஓராண்டு நன்­ன­டத்­தைக் கண்காணிப்பு விதிக்­கப்­பட்­டது.

சில நாள் கழித்து, பாதிக்­கப்­பட்ட பெண்­ணின் முன்­னாள் கண­வ­ருக்கு மூன்­றாண்டு சிறை, நான்கு பிரம்­ப­டி­கள், $1,500 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டன.