தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பயங்கரவாதத்துக்கு எதிரான விழிப்புநிலை தொடரவேண்டும்

2 mins read
bbde4c45-78a4-4cf8-8876-5ab6cfdee6be
-

பயங்­க­ர­வா­தம், சுய­ தீவி­ர­வா­தப் போக்­குக்கு மாறு­வது ஆகி­யவை சிங்­கப்­பூ­ரின் அமை­திக்­கும் வளப்­பத்­துக்­கும் தொடர்ந்து மிரட்­ட­லாக உள்­ள­தால் அவற்­றுக்கு எதி­ரான போராட்­டத்­தில் சிங்­கப்­பூ­ரர்­கள் விழிப்­பு­நி­லை­யைக் குறைக்­கக் கூடாது என்று சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கம் கூறி­யுள்­ளார்.

தொடர்பு, தக­வல் அமைச்சு நடத்­திய ஆய்­வு­களில் கலந்­து­கொண்­டோ­ரில், சிங்­கப்­பூரை பயங்­க­ர­வா­தி­கள் குறி­வைத்­தி­ருப்­ப­தாக நம்­பி­ய­வர்­க­ளின் எண்­ணிக்கை 2019ஐவிட 2021ல் 7 விழுக்­காடு குறைந்­தது. அந்­தப் புள்­ளி­வி­வ­ரங்­க­ளைச் சுட்­டிய அமைச்­சர், "ஆபத்து இருப்­ப­தாக மக்­க­ளின் உணர்வு குறை­கிறது. ஆனால் உண்­மை­யில் ஆபத்து கூடி வரு­கிறது," என்­றார்.

உள்­துறைக் குழுப் பயிற்­சிக் கழ­கத்­தில் நேற்று நடை­பெற்ற அமைச்­சர் விரு­து­களை வழங்­கும் விழா­வில் அமைச்சர் சண்­மு­கம் பேசி­னார்.

இணை­யத்­தில் காணொ­ளி க­ளைப் பார்த்­து­விட்டு, சுய­மா­கத் தீவி­ர­வா­தப் போக்­குக்கு மாறி­யதை அடுத்து கல்வி அமைச்­சின் ஆசி­ரி­யர் கடந்த ஆண்டு அக்­டோ­ப­ரில் தடுத்து வைக்­கப்­பட்ட சம்­ப­வத்தை திரு சண்­மு­கம் சுட்­டி­னார். அந்த ஆசி­ரி­யர், ஆயுத­ம் ஏந்­தி ஜிஹாத் போரில் பங்­கெ­டுக்க, காஸா பகு­திக்­குச் செல்­லத் திட்­ட­மிட்­டி­ருந்­தார்.

அது அத்­த­கைய முதல் சம்­ப­வ­மல்ல என்ற திரு சண்­மு­கம், 2021ல் வேறொரு சிங்­கப்­பூ­ரர் காஸா­வுக்­குச் செல்ல விரும்­பி­ய­தா­க­வும் சிங்­கப்­பூ­ரில் உள்ள யூதர்­க­ளைத் தாக்க விரும்­பி­ய­தா­க­வும் கூறி­னார்.

மேலும், தொழில்­நுட்ப முன்­னேற்­றங்­க­ளால் சிங்­கப்­பூர் தொடர்ந்து எதிர்­நோக்­கும் சவால்­கள் பற்­றி­யும் அமைச்­சர் குறிப்­பிட்­டார். மோச­டி­கள், பகை­மை­யு­டன் மேற்­கொள்­ளப்­பட்ட பொய்­ ப­ரப்பும் இயக்­கங்­கள் போன்­றவை அவற்­றில் சில­வா­கும்.

2022ன் முதற்­பா­தி­யில் மட்­டும் 14,000 மோச­டி­கள் நிகழ்ந்­த­தைச் சுட்­டிய அவர், பகை­மை­யு­டன் பொய்­யான தக­வல்­க­ளைப் பரப்­பு­ வதை சமூக ஊட­கத் தளங்­கள் இன்­னும் எளி­தாக்கி விட்­ட­தா­கச் சொன்­னார்.

சில எடுத்­துக்­காட்­டு­களை முன்­வைத்த திரு சண்­மு­கம், சிங்­கப்­பூர் சிறிய, பல இன, பல சமய நாடு என்­ப­தால் அது பொய் பரப்­பும் இயக்­கங்­க­ளுக்கு எளி­தாக இலக்­கா­கக் கூடும் என்று குறிப்­பிட்­டார்.