உலக இணையக் குற்றவாளிகளின் அச்சுறுத்தலை முறியடிக்க இணையத் தாக்குதல் தொடர்பான தகவ்லகளைப் பகிர்ந்துகொண்டு நாடுகள் ஒத்துழைப்பது அவசியம் என்று உலகப் பொருளியல் மன்ற கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவில் சிங்கப்பூரின் தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ இடம்பெற்று உள்ளார்.
இணையக் குற்றத்தைத் தடுப்பதில் மேம்படுத்தப்பட்ட அனைத்துலக ஒத்துழைப்பைப் பெறுவது என்பது சிங்கப்பூரின் இணையப் பாதுகாப்பு உத்தியின் முக்கிய அம்சங்களில் ஒன்று என்று அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூரின் அறிவார்ந்த தேசத் திட்டம் மற்றும் இணையப் பாதுகாப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திருவாட்டி டியோ, இணையக் குற்றவாளிகளுக்கு எல்லை இல்லை என்றார்.
நாடுகளின் ஒத்துழைப்பு இல்லாமல்போனால் அந்த ஒற்றுமையின்மையை இணையக் குற்றவாளிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.
உலகப் பொருளியல் மன்றம் இவ்வாண்டுக்கான உலக இடர்ப்பாட்டு அறிக்கையை கடந்த வாரம் வெளியிட்டது. இந்த ஆண்டில் உலகம் சந்திக்க இருக்கும் பத்து அபாயங்களில் இணையக் குற்றம் மற்றும் இணையப் பாதுகாப்பின்மை முக் கிய இடம்பெற்றுள்ளது.