வருமான உச்சவரம்பில் மாற்றம்

வருமான உச்சவரம்பில் மாற்றம்

3 mins read
ab8c8e02-7921-49c7-a466-dd8ed19e3e91
-

பாலர் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

கல்வி அமைச்­சின் பாலர் பள்­ளி­களில் வரு­மான உச்சவரம்பு அடிப் படையில் முன்­னு­ரிமை அளிக்­கும் மாண­வர் சேர்க்­கை­யில் மாற்­றம் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அடுத்த மாதம் 17ஆம் நடப்­புக்கு வரும் இந்த மாற்­றத்­தில் குடும்ப வரு­மா­னத்­தின் உச்ச வரம்பு $3,500லிருந்து $4,500க்கு உயர்த்­தப்­ப­டு­கிறது. இதே நாளில்­தான் மாண­வர் சேர்ப்­புக்­கான பதி­வும் தொடங்­கு­கிறது.

வரு­மா­னம் அதி­க­ரித்து வரும் நிலை­யில் குறைந்த வரு­மா­னக் குடும்­பங்­க­ளைச் சேர்ந்த பிள்ளை களுக்கு பாலர் பள்­ளி­களில் இட­மி­ருப்­பதை உறுதி செய்­யும் நோக்­கத்­தில் இந்த மாற்­றத்தை கல்வி அமைச்சு கொண்டு வந்­துள்­ளது.

2024ஆம் ஆண்­டின் மாண­வர் சேர்க்­கை­யில் கல்வி அமைச்­சின் 55 பாலர் பள்­ளி­களில் பதிவு தொடங்­கப்­படும். 2022ஆம் ஆண்­டில் 50 பள்­ளி­கள் மட்­டுமே இருந்­தன. 2025ஆம் ஆண்­டு­வாக்­கில் வழக்­க­மாக தொடக்­கப்­பள்­ளி­களில் இடம்­பெ­றும் இத்­த­கைய பாலர் பள்­ளி­கள் 57க்கு அதி­க­ரிக்­க­வி­ருக்­கிறது.

பாலர் பள்­ளி­யி­லி­ருந்து ஒரு கிலோ மீட்­டர் சுற்­ற­ள­வில் வசிக்­கும் சிங்­கப்­பூர் குடி­மக்­க­ளுக்கு மாண­வர் சேர்க்­கை­யில் முன் னுரிமை அளிக்­கப்­படும்.

இவர்­க­ளு­டைய குடும்ப வரு­மா­னம் புதிய உச்ச வரம்­பின்­படி $4,500க்குள் இருக்க வேண்­டும். அதா­வது குடும்­பத்­தில் தனி­ந­ப­ரின் மாத வரு­மா­னம் 1,125ஆக இருக்க வேண்­டும். மூன்­றில் ஒரு பங்கு இடம் இவர்­க­ளுக்கு ஒதுக்­கப்­படும்.

எஞ்­சிய இடங்­கள் வரு­மான உச்­ச­வ­ரம்­பின்றி குடி­மக்­க­ளுக்­கும் பாலர் பள்ளி அல்­லது தொடக்­கப்­பள்­ளி­யில் படித்த உடன் பிறந்­தோ­ரின் நிரந்­த­ர­வா­சி­க­ளுக்­கும் இட­ம­ளிக்­கப்­படும்.

இதை­ய­டுத்து பொதுப் பிரி­வில் குடி­மக்­க­ளுக்­கும் நிரந்­த­ர­வா­சி­க­ளுக்­கும் வாய்ப்பு அளிக்­கப்­படும் என்று கல்வி அமைச்­சின் இணை­யத்தளம் தெரி­விக்­கிறது.

2023ஆம் ஆண்­டில் கல்வி அமைச்­சின் பாலர் பள்­ளி­களில் சிங்­கப்­பூர் குடி­மக்­க­ளா­கிய ஒவ்­வொரு குழந்­தை மாதம் $160 செலுத்துகின்­ற­னர்.

இதுவே நிரந்­த­ர­வா­சி­க­ளுக்கு 320 வெள்­ளி­யாக உள்­ளது.

இதர கட்­ட­ணங்­கள் எது­வும் இல்லை. வெளிப்­புற நட­வ­டிக் கைகள் இல­வ­ச­மா­கும்.

இந்த நிலை­யில் பிப்­ர­வரி 11 அல்­லது பிப்­ர­வரி 18 தேதி­களில் கல்வி அமைச்­சின் 55 பாலர் பள்­ளி­களும் பொது­மக்­கள் பார்­வைக்கு திறந்து வைக்­கப்பட­வி­ருக்­கிறது.

மாண­வர் பதி­வுக்கு முன்பு பள்­ளி­க­ளைப் பற்றி பெற்­றோர் நன்­க­றிந்து கொள்­வ­தற்கு இது உத­வி­யாக இருக்­கும் என்று கல்வி அமைச்சு கூறி­யது.

கொவிட்-19 தொற்­று­நோய் பர­விய காலத்­தில் பொது­வ­ர­வேற்பு இணை­யம் வழி­யாக நடத்­தப்பட்­டது. அதன் பிறகு முதல் முறை­யாக பாலர் பள்­ளி­கள் பொது­மக்­க­ளுக்­குத் திறக்­கப்­படு கிறது.

அனைத்து பாலர் பள்­ளி­களும் இரு மொழிக் கல்­வியை ஊக்­கு­விக்­கும் நோக்­கில் சீனம், மலாய், தமிழ் ஆகிய மூன்று தாய் மொழி­களில் கல்­வியை வழங்குகின்­றன.

அது­மட்­டு­மல்­லா­மல் 'கேகேர்' எனும் பாலர் பள்ளி பரா­ம­ரிப்பு நிலை­யங்­களில் கட்­ட­ணச் சலு­கை­யு­டன் பள்­ளிக்­குப் பிந்­திய பரா­ம­ரிப்­புச் சேவை­யும் வழங்­கப்­ப­டு­கிறது.

2023ஆம் ஆண்­டின் மாண­வர் சேர்க்கை, 2019 ஜன­வரி 2லிருந்து 2020 ஜன­வரி 1 வரை­ பிறந்த சிங்­கப்­பூ­ரர்­கள், நிரந்­த­ர­வாசி களுக்கு உரி­யது என்­றும் கல்வி அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

பிப்­ர­வரி 17ஆம் தேதி காலை 9.00 மணி­யி­லி­ருந்து பிப்­ர­வரி 21ஆம் தேதி மாலை 4.00 மணி வரை கல்வி அமைச்­சின் பாலர் பள்­ளி­யின் இணை­யத்­த­ளம் வழி­யாக பெற்­றோர் தங்­க­ளு­டைய பிள்­ளை­க­ளைப் பதிந்­து­கொள்ள லாம்.