மும்பைக்குப் புறப்பட்ட விமானத்தில் கோளாறு; வட்டமடித்து சாங்கி திரும்பியது

மும்பைக்குப் புறப்பட்ட விமானத்தில் கோளாறு; வட்டமடித்து சாங்கி திரும்பியது

1 mins read
4b05fd6a-f61f-49f9-b775-d95996cef7bb
-

இந்­தி­யா­வின் மும்பை நக­ரத்தை நோக்கி நேற்று புறப்­பட்ட விஸ்­தாரா பய­ணி­கள் விமா­னத்­தில் எதிர்பாராதவிதமாக தொழில்­நுட்­பக் கோளாறு ஏற்­பட்­ட விமானம் மீண்­டும் சாங்கி விமான நிலை­யத்­துக்குத் திரும்­பி­யது.

சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து 'யுகே106' விமா­னம் காலை 11.000 மணி­யில் புறப்­பட்­டது என்று ஃபிளைட்­டி­ரே­டர் இணை­யத்தளத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

'ஏர்­பஸ் ஏ321' ரக விமா­ன­மான அது மலே­சி­யா­வுக்கு மேலே வட்­ட­ம­டித்து பிறகு சாங்கி விமான நிலை­யத்­துக்­குத் திரும்­பி­யது.

விமா­னம் புறப்­பட்ட சிறிது நேரத்­தில் ஓர் இயந்­தி­ரத்­தில் கோளாறு கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது என்று விஸ்­தாரா பேச்­சா­ளர் ஒரு­வர் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் விசா­ரித்­தற்­குப் பதி­ல­ளித்­தார்.

"முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக விமா­னத்­தைத் திருப்ப விமா­னி­கள் முடிவு செய்­த­னர். அதன் பிறகு சாங்கி விமான நிலை­யத்­தில் விமா­னம் தரை­யிறக்கப்­பட்­டது," என்­றார் அவர்.

பாதிக்­கப்­பட்ட பய­ணி­க­ளுக்கு மாற்று ஏற்­பா­டு­களை செய்ய மற்ற விமான நிறு­வ­னங்­களை தொடர்பு கொண்­ட­தா­க­வும் அவர் கூறி­னார்.

பெரும்­பா­லான பய­ணி­கள் அதே நாளில் மற்­றொரு விமா­னத்­தில் அனுப்பி வைக்­கப்­பட்­ட­னர்.

விமா­னத்­தில் எத்­தனை பய­ணி­கள் இருந்­த­னர் என்­பதை விஸ்­தாரா தெரி­விக்­க­வில்லை.

'ஏர்­பஸ் ஏ321' விமா­னங்­களில் 188 பய­ணி­கள் வரை பய­ணம் செய்ய முடி­யும்.

சில பய­ணி­கள் புதன்­கி­ழமை மாலை புறப்­பட்ட சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் விமா­னம் மூலம் அனுப்பி வைக்­கப்­பட்­ட­தாக அறி­யப்­ப­டு­கிறது.

அவர்­க­ளுக்கு உணவு பற்­றுச் சீட்­டுகளும் வழங்­கப்­பட்­டன.

இந்­தச் சம்­ப­வம் குறித்து விசா­ரணை தொடங்­கப்­பட்­டுள்­ளது.

டாடா சன்ஸ், எஸ்­ஐஏ ஆகி­ய­வற்­றின் கூட்டு நிறு­வ­னம் விஸ்­தாரா.