உலகின் ஆகப்பெரிய சரக்கு நிறுவனத்தை வாங்க சேட்ஸ் பங்குதாரர்கள் ஒப்புதல்

உலகின் ஆகப்பெரிய சரக்கு நிறுவனத்தை வாங்க சேட்ஸ் பங்குதாரர்கள் ஒப்புதல்

1 mins read
063df411-8904-498f-852b-bdad40ddb750
-

உல­கின் ஆகப்­பெ­ரிய சரக்கு நிறு­வ­ன­மான வேர்ல்ட்­வைட் ஃபிளைட் சர்­வி­சஸை (WFS) வாங்க சிங்­கப்­பூ­ரின் சேட்ஸ் லிமி­டெட் நிறு­வ­னத்­தின் பங்­கு­தா­ரர்­கள் ஏக­ம­ன­தாக ஒப்­பு­தல் அளித்­துள்­ள­னர்.

நேற்று நடை­பெற்ற இயக்­கு­நர் சபைக் கூட்­டத்­தில் நேர­டி­யா­க­வும் மின்­னி­லக்க வழி­யா­க­வும் வாக்­க­ளிப்பு நடை­பெற்­றது.

அப்­போது 96.80 விழுக்­காடு பங்­கு­தா­ரர்­கள் $1.82 பில்­லி­யன் டாலர் நிறு­வ­னத்தை வாங்க ஒப்­பு­தல் அளித்­த­னர்.

சேட்ஸ் நிறு­வ­னத்­துக்கு 50 விழுக்­காடு குறு­கிய பெரும்­பான்­மையே இதற்குத் தேவைப்­பட்­டது.

சிறிய வாக்­க­ளிப்­பில் ஆத­ர­வா­க­வும் எதிர்ப்­பா­க­வும் நடு­நிலை வகிக்­க­வும் பங்­கு­தா­ரர்­க­ளுக்கு வாய்ப்பு அளிக்­கப்­பட்­டது.

ஆனால் 'ஆம்' என்று பெரும்­பா­லான பங்­கு­தா­ரர்­கள் பேராதரவு தந்தனர்.

தெமா­செக் ஹோல்­டிங்ஸ் தனது வனி­ஸியோ இன்­வெஸ்ட்­மண்ட்ஸ் மூலம் சேட்ஸ் நிறு வ­னத்­தின் 39.68 விழுக்­காடு பங்குகளை தனது வசம் வைத்­துள்­ளது. நேற்று நடை­பெற்ற வாக்­க­ளிப்­பின்­போது வனி­ஸியோ இன்­வெஸ்ட்­மண்ட்ஸ் ஆத­ர­வாக வாக்­க­ளித்­தது.

"பங்குதாரர்களிடமிருந்து கிடைத்துள்ள உறுதியான ஆதர வால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளோம்," என்று சேட்ஸ் நிறு வனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கெர்ரி மோக் தெரிவித்தார்.

வளர்ச்சி வாய்ப்புகளையும் உத்திபூர்வ மதிப்பையும் பங்குதாரர்கள் அங்கீகரிப்பதை இது தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது என்றார் அவர்.

உலகளாவிய வாடிக்கை யாளர்களுக்கு சேவையாற்ற சிறந்த வகையில் நிலைநிறுத்திக் கொள்ள முடியும். சிங்கப்பூரின் உள்ளூர் சந்தையிலிருந்து மேம் பட்டு லாபகரமான வளர்ச்சிப் பாதைக்குச் செல்லவும் இது வழி வகுக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.