வாகன உரிமை சான்றிதழ் விலை அதிகரிப்பு

வாகன உரிமை சான்றிதழ் விலை அதிகரிப்பு

1 mins read
26927b4b-c640-48cb-b22f-d6597f5960f7
-

வாகன உரிமை சான்­றி­தழ் விலை­கள் மீட்­சி­ய­டைந்­துள்­ளன.

கடந்த வார இறு­தி­யில் நடை­பெற்ற சிங்­கப்­பூர் வாகன கண்­காட்­சி­யைத் தொடர்ந்து விற்­பனை மேலும் அதி­க­ரிக்­கும் என்ற எதிர்­பார்ப்பு நில­வி­யது.

அதற்கு ஏற்ப வாகன உரி­மைச் சான்­றி­தழ் விலை­கள் இரு பிரி­வு­கள் தவிர அனைத்­துப் பிரிவு­க­ளி­லும் அதி­க­ரித்­துள்­ளன. 1,600 சிசி­யும் 130பிஎச்பி வரை­யி­லான வாக­னங்­கள், 110 கிலோ வாட் சக்­தி­கொண்ட மின்­சார வாக­னங்­கள் ஆகி­ய­வற்­றுக்­கான சிஓஇ விலை 86,000 வெள்­ளிக்கு அதி­க­ரித்­துள்­ளது.

இது, 2022ஆம் ஆண்­டின் இறுதி ஏலக்­குத்­த­கை­யில் 80,000 வெள்­ளி­யாக இருந்­தது.

பெரிய கார்­கள், அதிக சக்­தி­யுள்ள மின்­சார வாக­னங்­க­ளுக்­கான பிரி­வில் சிஓஇ $102,002லிருந்து $105,459ல் முடி­வ­டைந்­தது.

இருந்­தா­லும் மோட்­டார் சைக்­கிள் தவிர அனைத்து வாக­னங்­க­ளுக்­கும் பயன்­ப­டுத்­தப்­படும் பொதுப் பிரி­வின் சிஓஇ விலை $107,889லிருந்து $107,000 என சற்­றுக் குறைந்­தது.

இது, வர­வி­ருக்­கும் ஏலக் குத்­த­கை­யில் தேவை குறை­யும் என்­ப­தைக் காட்­டு­வ­தாக தொழில்­துறை நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

வேன், டிரக், லாரி உட்­பட வர்த்­தக வாக­னங்­க­ளுக்­கான பிரி­வின் சிஓஇ விலை $77,301 வெள்­ளி­யி­லி­ருந்து $77,109க்கு நிலை­பெற்­றது. மோட்­டார் சைக்­கிள்­கள் பிரிவு கட்­ட­ணம் 1.9 விழுக்காடு கூடி 11,101 வெள்ளி யில் முடிந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.