இறைச்சி இறக்குமதியாளருக்கு 40,000 வெள்ளி அபராதம்

இறைச்சி இறக்குமதியாளருக்கு 40,000 வெள்ளி அபராதம்

1 mins read
0c6daa8a-a9ac-4e6c-9eb9-1a4604030d31
-
Google News Preferred Icon

உரி­மம் பெற்ற இறைச்சி இறக்­கு­ ம­தி­யா­ளர் ஒரு­வ­ருக்கு, அதி­காரிகளின் சோத­னை­யில்­லா­மல் உறைய வைக்­கப்­பட்ட 'சிக்­கன் பேட்­டிஸ்' விற்­ற­தற்­காக 40,000 வெள்ளி அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

சின் லி-ஹின் ஃபிரோஸன் ஃபுட் எனும் நிறு­வ­னம் சோத­னைக்கு ஏற்­பாடு செய்­யத் தவறி­யது மட்­டு­மல்­லா­மல் சிங்­கப்­பூர் உணவு நிலை­யத்­தின் சான்­றி­த­ழை­யும் பெற­வில்லை.

1985ஆம் ஆண்­டி­லி­ருந்து செயல்­படும் சின் லி-ஹின் ஃபிரோஸன் ஃபுட், உறைய வைக்­கப்­பட்ட உண­வு­களை விற்று வரு­கிறது.