டெங்கிப் பரவல் அதிகரிக்கக்கூடும்

டெங்கிப் பரவல் அதிகரிக்கக்கூடும்

2 mins read
302e2bc4-f062-45a9-99e5-9d11d348d413
சென்ற மாதம் சிங்­கப்­பூ­ரில் ஏடிஸ் கொசுக்­க­ளின் எண்­ணிக்கை 2021ஆம் ஆண்­டின் டிசம்­பர் மாதத்­தை­விட 24 விழுக்­காடு அதி­க­ரித்­தி­ருந்­த­தாக தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் கூறி­யது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஓராண்டுக்கு முன்பைவிட சென்ற வாரம் இருமடங்கு டெங்கி பாதிப்பு; தேசிய சுற்றுப்புற வாரியத்தின் எச்சரிக்கை

சிங்­கப்­பூ­ரில் சென்ற வாரம் டெங்­கிச் சம்­ப­வங்­கள் அதிக அள­வில் பதி­வா­கி­யுள்­ளன.

ஒப்­பு­நோக்க, ஓராண்­டுக்கு முன்பு இதே கால­கட்­டத்­தில் பதி­வான டெங்­கிச் சம்­ப­வங்­க­ளை­விட அது கிட்­டத்­தட்ட இரு­மடங்கு என்று தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் தெரி­வித்­தது.

நாட்­டில் டெங்­கிப் பர­வல் மோச­ம­டை­யக்­கூ­டும் என்று வாரி­யம் எச்­ச­ரித்­துள்­ளது.

தற்­போது 'செரோ­டைப் 3' எனும் வகை­யான டெங்­கித் தொற்று இங்கு காணப்­ப­டு­கிறது.

வேக­மா­கப் பர­வும் ஆற்­றல் கொண்ட இந்த வகை டெங்­கித் தொற்­றுக்கு எதி­ரான தடுப்­பாற்­றல் சிங்­கப்­பூர்­வா­சி­க­ளி­டையே குறைவு.

இத­னால் அதி­க­மா­னோர் டெங்­கி­யால் பாதிக்­கப்­ப­டக்­கூ­டும்­சாத்­தி­யம் உள்­ளது என்­பதை வாரி­யம் சுட்­டி­யது.

எனவே கொசுக்­கள் பெரு­கு­வதைத் தடுக்க அனை­வ­ரும் உட­ன­டி­யாக கூட்டு நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்­டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

சென்ற வாரம் சிங்­கப்­பூ­ரில் 279 பேருக்கு புதி­தாக டெங்­கித் தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.

நேற்று முன்­தின நில­வ­ரப்­படி, 82 இடங்­கள் டெங்கி பர­வும் அபா­யம் அதி­கம் உள்­ள­வை­யாக வகைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன.

இவற்­றில் 13 இடங்­கள் பெரிய அள­வி­லான டெங்­கிப் பர­வல் அபா­யம் நில­வும் இடம்.

டெங்­கித் தொற்று உறுதி செய்­யப்­பட்­டோ­ரில் பத்து அல்­லது அதற்கு மேற்­பட்­டோர் தொடர்­பு­ப­டுத்­தப்­பட்­டால் அது பெரிய அள­வி­லான டெங்­கிப் பர­வல் அபா­ய­முள்ள இட­மா­கக் கரு­தப்­படும்.

சிங்­கப்­பூ­ரில் சென்ற ஆண்டு இதே கால­கட்­டத்­தில் மொத்­தம் 147 டெங்­கிச் சம்­ப­வங்­கள் பதி­வா­யின.

இந்த ஆண்­டுத் தொடக்­கத்­தில் இருந்தே டெங்­கிச் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­மாக இருப்­ப­தாக தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் சொன்­னது.

பெரிய அள­வில் டெங்­கிப் பர­வல் அபா­ய­முள்ள இடங்­கள் மூன்­றில் டெங்­கித் தொற்று வெகு வேக­மா­கப் பர­வு­வ­தாக அது குறிப்­பிட்­டது.

ஹவ்­காங் அவென்யூ 1, தோ பாயோ லோரோங் 4, ஹவ்­காங் அவென்யூ 6 ஆகி­யவை அவை.

பொது­வாக 14 நாள்­க­ளுக்­குள், 150 மீட்­டர் இடை­வெ­ளி­யில் இரண்டு அல்­லது அதற்கு மேற்­பட்ட டெங்­கித் தொற்­றுச் சம்­ப­வங்­கள் கண்­ட­றி­யப்­பட்­டால் அந்­தப் பகுதி டெங்­கிப் பர­வல் அபா­ய­முள்ள இட­மாக வகைப்­ப­டுத்­தப்­படும்.

சென்ற மாதம் சிங்­கப்­பூ­ரில் ஏடிஸ் கொசுக்­க­ளின் எண்­ணிக்கை 2021ஆம் ஆண்­டின் டிசம்­பர் மாதத்­தை­விட 24 விழுக்­காடு அதி­க­ரித்­தி­ருந்­த­தாக தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் கூறி­யது.

கொசுக்­கள் இனப்­பெ­ருக்­கம் செய்­யக்­கூ­டிய இடங்­களை அழிப்­ப­தற்கு அனை­வ­ரும் உட­ன­டி­யா­கச் செயல்­ப­ட­வேண்­டும் என்று அது வலி­யு­றுத்­தி­யது.

வீடு­களை அலங்­க­ரிக்க உத­வும் பூச்­சா­டி­கள், பூந்­தொட்­டி­கள் உள்­ளிட்­ட­வற்­றில் தண்­ணீர் தேங்­கா­மல் பார்த்­துக்­கொள்­வது மிக முக்­கி­யம். புத்­தாண்டை ஒட்டி, பல­ரும் அலங்­கா­ரச் செடி­க­ளைக் கொண்டு அழ­கு­ப­டுத்த முனை­வர் என்­ப­தால் வீடு­கள், வர்த்­தக வளா­கங்­கள் போன்றவை மட்­டு­மன்றி செடி­களை விற்­கும் கடை­க­ளி­லும் தேசிய சுற்றுப்புற வாரி­யத்­தின் அதி­கா­ரி­கள் சோத­னை­யி­டு­வர் என்று கூறப்­பட்­டது.

இதன் தொடர்­பில் வாரி­யம் விழிப்­பு­ணர்வு இயக்­கம் ஒன்­றைத் தொடங்­கி­யுள்­ளது.

டெங்­கித் தடுப்பு நட­வ­டிக்கை தொடர்­பான தக­வல்­கள் அச்­சி­டப்­பட்ட சிவப்பு உறை­கள், விழாக்­கால சுவ­ரொட்­டி­கள் போன்­ற­வற்றை அது வழங்­கி­வருகிறது.

இல்­லங்­க­ளி­லும் வர்த்­தக வளா­கங்­க­ளி­லும் செடி­கள் வைத்­தி­ருப்­போர், தண்­ணீர் தேங்­கா­ம­ல் இ­ருப்­பதை உறு­தி­செய்­யும்­படி வாரி­யம் அனைவருக்கும் நினை­வு­றுத்­தி­யுள்­ளது.