'துடிப்புடன் மூப்படைவதற்கான புத்தாக்க தீர்வுகள் தொடரும்'

'துடிப்புடன் மூப்படைவதற்கான புத்தாக்க தீர்வுகள் தொடரும்'

1 mins read
891dcab3-cd7a-4115-9024-054655d31e86
மூத்­தோர் அர­சாங்­கக் கொள்­கை­க­ளைப் புரிந்­து­கொள்­ள­வும் அவர்­க­ளுக்­குத் தேவைப்­படும் சேவை­க­ளு­டன் இணைக்­க­வும் ஒருங்­கி­ணைந்த பரா­ம­ரிப்பு அமைப்பு பொறுப்­பேற்­றுள்­ள­தைத் திரு லீ சுட்­டி­னார். படம்: உலக பொருளாதார மாநாடு -

துடிப்­பு­டன் மூப்­ப­டைய உத­வும் புத்­தாக்க வழி­மு­றை­க­ளை­யும் தீர்­வு­க­ளை­யும் கண்­ட­றி­வ­தில் சிங்­கப்­பூர் தொடர்ந்து கவ­னம் செலுத்­தும் என்று தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ கூறி­யி­ருக்­கி­றார்.

உல­கப் பொரு­ளி­யல் கருத்­தரங்­கில் அவர் உரை­யாற்­றி­னார். மூப்­ப­டை­யும் மக்­கள்­தொகை தொடர்­பான விவ­கா­ரங்­களை சிங்­கப்­பூர் எவ்­வாறு கையாள்­கிறது என்­பது பற்றி அவர் எடுத்­து­ரைத்­தார்.

வீ­ட­மைப்பு தொடர்­பான புத்­தாக்­கத்­திற்­குச் சான்­றாக சமூக பரா­ம­ரிப்பு வீடு­களை அமைச்­சர் குறிப்­பிட்­டார். மூத்­தோ­ருக்கு ஏற்ற இந்­தப் பொது வீட­மைப்பு வீடு­களில் பரா­ம­ரிப்­புச் சேவை­கள் இணைக்­கப்­பட்­டி­ருக்­கும். புக்­கிட் பாத்­தோக், குவீன்ஸ்­ட­வுன் ஆகிய இடங்­களில் இத்­த­கைய வீடு­கள் முத­லில் கட்­டப்­படும்.

மேலும், மூத்­தோர் அர­சாங்­கக் கொள்­கை­க­ளைப் புரிந்­து­கொள்­ள­வும் அவர்­க­ளுக்­குத் தேவைப்­படும் சேவை­க­ளு­டன் இணைக்­க­வும் ஒருங்­கி­ணைந்த பரா­ம­ரிப்பு அமைப்பு பொறுப்­பேற்­றுள்­ள­தைத் திரு லீ சுட்­டி­னார்.

எதிர்வரும் 2030ஆம் ஆண்­டில் சிங்­கப்­பூ­ரில் நான்­கில் ஒரு­வர் 65 அல்­லது அதற்கு மேற்­பட்ட வயது நிரம்­பி­ய­வ­ராக இருப்­பார் என்­றார் அமைச்­சர்.

சிங்­கப்­பூ­ரில், சமூக சேவை­களுக்கு அர­சாங்க நிதி­யு­தவி, தாதிமை இல்­லங்­கள், அந்­தி­ம­கா­லப் பரா­ம­ரிப்பு, மன­ந­லம் குன்­றிய மூத்­தோர் சார்­பில் பரா­ம­ரிப்­பா­ளர் முடி­வெ­டுக்க வகை­செய்­யும் சட்ட நடை­முறை போன்ற அம்­சங்­கள் பின்பற்றப்படுவதை அமைச்சர் கூறினார்.

வரி உயர்­வின் மூலம் கிடைக்­கும் பணத்­தைக் கொண்டு சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக்­கான கூடு­தல் செலவு ஈடு­கட்­டப்­படும் என்­ப­தை­யும் அமைச்­சர் லீ விளக்­கி­னார்.