சுற்றுப்பயணத் துறையில் 4,000 புதிய வேலைகள்

சுற்றுப்பயணத் துறையில் 4,000 புதிய வேலைகள்

2 mins read
9cb736dc-7969-47a6-bc39-5998ba54879a
-

சுற்­றுப் பய­ணத்­து­றை­யில் ஏறக்­கு­றைய 4,000 வேலை வாய்ப்­பு­கள் இருக்­கின்­றன. சிங்­கப்­பூ­ரில் விருந்­தோம்­பல் துறை சார்ந்த கல்வி பயி­லும் மாண­வர்­க­ளுக்கு இதில் முன்­னு­ரிமை வழங்­கப்­படும். நீடித்த நிலைத்­தன்மை மிக்க சுற்­றுப்­ப­ய­ணம், நகர்ப்­புற ஆரோக்­கி­யம் சார்ந்த இட­மா­கத் திகழ்­வ­தற்­கான சிங்­கப்­பூ­ரின் முயற்­சிக்கு இவர்­கள் கைகொ­டுப்­பர்.

சுற்­றுப்­ப­ய­ணத் துறை மீட்­சி­காணும் வேளை­யில் துறை சார்ந்த நிறு­வ­னங்­கள் ஆள்­சேர்ப்­பில் முனைந்­துள்­ளன. நீடித்த நிலைத்­தன்மை, ஆரோக்­கி­யம் ஆகிய துறை­களில் புதிய வேலை வாய்ப்­பு­கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன.அவற்­றுக்­கான திறன் தகு­தி­களும் வரை­ய­றுக்­கப்­பட்­டுள்­ளன என்று சிங்­கப்­பூர் பய­ணத்­து­றைக் கழ­கத்­தின் கொள்­கைத் திட்­ட­மி­டல் குழு­வுக்­கான துணைத் தலைமை நிர்­வாகி ஜீனி லிம் கூறி­னார்.

நீடித்த நிலைத்­தன்மை மிக்க பொருள்­கள், உள்­கட்­ட­மைப்பு போன்­ற­வற்­றுக்­கான தேவை தொடர்ந்து விரி­வாக்­கம் காண்­ப­தால் பசுமை சார்ந்த புதிய வேலை­க­ளுக்­கான தேவை அதி­க­ரிப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டார். கரி­யமில கணக்­கா­ளர், நீடித்த நிலைத்­தன்மை மேலா­ளர் போன்ற பத­வி­களை அவர் சுட்­டி­னார்.

தற்­போ­துள்ள வேலை­களும் உரு­மாற்­றம் காணும் என்­றார் திரு­வாட்டி லிம். சுற்­றுப்­ப­ய­ணத்­துறை உரு­மாற்­றம் 2023 எனும் நிகழ்ச்­சி­யில் அவர் உரை­யாற்­றி­னார்.

பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­களும் தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கங்­களும் இணைந்து விருந்­தோம்­பல் துறை, சுற்­றுப்­ப­ய­ணத் துறை ஆகி­ய­வற்­றில் பயி­லும் மாண­வர்­க­ளுக்­காக ஏற்­பாடு செய்த வேலை­வாய்ப்­புச் சந்தை அது. நிகழ்ச்சி, சிங்­கப்­பூர் பல­துறைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் நேற்று நடை­பெற்­றது.

சென்ற ஆண்டு செப்­டம்­பர் மாத நில­வ­ரப்­படி ஏறத்­தாழ 65,000 பேர் சுற்­றுப்­ப­ய­ணத் துறை­யில் பணி­யாற்­றி­னர். இது கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லுக்கு முந்­தைய 2019ஆம் ஆண்­டின் எண்­ணிக்­கை­யில் கிட்­டத்­தட்ட 78 விழுக்­காடு.

உல­க­ள­வில் சுற்­றுப்­ப­ய­ணி­க­ளி­டையே நீடித்த நிலைத்­தன்மை மிக்க பயண வாய்ப்­பு­கள் குறித்த விழிப்­பு­ணர்வு அதி­க­ரித்­துள்­ளது என்­றார் திரு­வாட்டி லிம். அத­னால் புதிய வேலை­களை உரு­வாக்­கு­வ­தற்­கான வாய்ப்­பு­களும் கூடி­யுள்­ளன.

ஐந்­தாம் முறை­யாக இடம்­பெறும் இந்த வேலை­வாய்ப்­புச் சந்­தை­யில், மவுண்ட் ஃபேபர் லெஷர் குருப், பிக்கோ ஆர்ட் நிறுவனம் உள்ளிட்ட 15 நிறு­வ­னங்­கள் காட்­சிக்­கூ­டங்­களை அமைத்­தி­ருந்­தன.