செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
80b53b05-364e-49db-8df0-9f6843659e67
-

சிறாருக்கு மானபங்கம்:

நால்வர் மீது குற்றச்சாட்டு

சிறார்கள் மானபங்கம்படுத்தப்பட்டதில் நான்கு பேர் சும்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்று சந்தேகிப்படுகிறது.இதன் தொடர்பில் அந்த நால்வர் மீதும் குற்றம் சமத்தப்பட்டு உள்ளது. மானபங்கப்படுத்தப் பட்டதாகக் கூறப்படும் சிறார்கள் 14 வயது அல்லது அதற்கும் குறைவானவர்கள்.

பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களைக் கட்டிக்காக்கும் வகையில் அந்த நால்வரின் விவரங்களை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் ஒரு பெண், 2018ஆம் ஆண்டுக்கும் 2020ஆம் ஆண்டுக்கும் இடையில் பலமுறை மானபங்கப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்தப் பெண் அப்போது 10க்கும் 12க்கும் இடைப்பட்ட வயதில் இருந்தார். அவரை 25 வயது ஆடவர் ஒருவர் மானபங்கப்படுத்தியதாக காவல்துறை தெரிவித்தது. அங் மோ கியோ அவென்யூ 4ல் வீவக வீடு ஒன்றின் படிக்கட்டில் 2019ஆம் ஆண்டில் 13 வயது பெண்ணை 50 வயது ஆடவர் மானபங்கப்படுத்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சுமத்தப்பட்டவர்களில் இதர இரண்டு பேரில் ஒருவருக்கு வயது 17. மற்றொருவருக்கு வயது 24.

இதனிடையே, இரவு நேர கேளிக்கை விடுதிகளில் நான்கு மானபங்கச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுவதாகவும் இவற்றின் தொடர்பில் 21 வயது முதல் 45 வயது வரைப்பட்ட நால்வர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்தது.

நிறுவனத்தின் துணைத் தலைவருக்கு $26,000 அபராதம்

அங்கீகாரம் இல்லாமல் கிராஞ்சி உட்லண்ட்ஸ்சின் ஒரு பகுதியில் மரங்கள் வெட்டப்பட காரணமாக இருந்த ஆலோசனை நிறுவனத்தின் துணைத் தலைவருக்கு நேற்று $26,000 அபராதம் விதிக்கப்பட்டது.

உயர் தொழில்நுட்ப பண்ணை ஆய்வு, உரு வாக்கச் செயல்பாடுகளின் மையமாக அமைய இருந்த கிராஞ்சி வேளாண்-உணவு புத்தாக்கப் பூங்காவை உருவாக்குவதன் தொடர்பில் ஜூரோங் நகராண்மைக் கழகம், சிபிஜி கன்சல்டண்ட்ஸ் ஆகியவற்றைச் சேர்ந்த நான்கு அதிகாரிகளில் ஜிம்மி லியூ, 63, ஒருவர். (படம்)

தேசிய பூங்காக் கழகத்திடம் இருந்து அங்கீகாரம் பெறுவதற்கு முன்பாக வனவிலங்கு தொடர்பான நிபந்தனைகளை அந்த நான்கு அதிகாரிகளும் நிறைவேற்ற வேண்டும். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை என்பது தெரியவந்தது.

இதன் காரணமாக 362 மரங்கள் அங்கீகாரம் இன்றி சாய்க்கப்பட்டன. லியூ, மூன்று குற்றச்சாட்டுகளின் பேரில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

ஜூரோங் நகராண்மைக் கழகத்தின் மூத்த திட்ட நிர்வாகி நியோ ஜெக் லின், 44, அதில் வேலை பார்த்த முன்னாள் துணை இயக்குநர் சோங் பூய் சி, 47, சிபிஜி நிறுவன இயக்குநர் டான் ஸீ சீ, 64, ஆகியோர் லியூவுடன் குற்றம் சுமத்தப்பட்ட இதர மூவர். நியோ, சோங் இருவருக்கும் ஏற்கெனவே தலா $30,000 அபராதம் விதிக்கப்பட்டது. டானுக்கு இன்னமும் தண்டனை விதிக்கப்படவில்லை.

மூவர் மீது சட்டவிரோத பங்கு கொள்முதல் குற்றச்சாட்டு

ஜப்பானின் நிப்பான் பெயிண்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம், A$3.8 பில்லியன் விலைக்கு ஆஸ்திரேலியாவின் டூலக்ஸ் குருப் நிறுவனத்தை வாங்க உத்தேசித்து இருப்பதாக 2019 ஏப்ரல் 17ஆம் தேதி அறிவித்தது.

நிப்பான் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் ஒன்றில் மூத்த துணைத் தலைவராக வேலை பார்த்த ஷே தோ ஹோக், 62, என்பவர், அந்தக் கொள்முதல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாகவே அது பற்றி தன் தங்கையான ஷே ஹுங் யீ, 59, என்பவரிடம் தெரிவித்தார்.

அந்தச் சகோதரி, தன் கணவரான சியூ பூன் லியோங், 62, என்பவருடன் சேர்ந்து திட்டம் போட்டு டூலக்ஸ் குருப் பங்குகளை வாங்கியதாகக் கூறப்படுகிறது. அந்த மூன்று பேர் மீதும் நேற்று பங்கு மற்றும் வருநிலை வர்த்தகச் சட்டத்தின்கீழ் குற்றம் சுமத்தப்பட்டது.