எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த பொறியாளர் ஒருவர் அந்த நிறுவனத்திற்குச் சேவைகளை விநியோகிக்கும் ஒரு நிறுவனத்தின் உரிமையாளரிடம் இருந்து லஞ்சம் வாங்கி தன்னுடைய கடனையும் கைப்பேசிக் கட்டணத்தையும் அடைத்தார்.
லாவ் யுயன் ஃபாய், 61, என்ற அந்த அதிகாரிக்கு $3,600 அபராதம் விதிக்கப்பட்டது. $1,350 தண்டத்தொகை செலுத்தும்படியும் உத்தரவிடப்பட்டது.
இரண்டு குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். மூன்றாவது குற்றச்சாட்டு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
அவர் 2019, 2021ஆம் ஆண்டுகளில் பணம் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

