ஆடவருக்கு $20,000 இழப்பீடு வழங்க உத்தரவு

ஆடவருக்கு $20,000 இழப்பீடு வழங்க உத்தரவு

2 mins read
45ca78e9-2bd4-4a14-8b1b-3ad807314ca9
திரு மா, நேர­டி­யாக மன­நல நிலை­யத்­திற்கு கொண்டு செல்­லப்­ப­டு­வ­தற்­குப் பதி­லாக கைவி­லங்­கி­டப்­பட்டு காவல்­துறை காவ­லில் வைக்­கப்­பட்­டதை நீதி­பதி கவ­னத்­தில் எடுத்­துக்­கொண்­டார். படம்: பிக்ஸாபே -

காவல்­துறை தன்னைத் தவ­றாக கைது செய்­து­விட்­டது என்று கூறி வழக்கு தொடுத்த ஓர் ஆட­வ­ருக்கு $20,000 இழப்­பீடு வழங்­கப்­பட்டு இருக்­கிறது.

மா கியாட் செங், 48, என்ற அந்த ஆட­வ­ருக்கு ஆத­ர­வாக உயர் நீதி­மன்­றம் தீர்ப்­ப­ளித்­தது.

இருந்­தா­லும் காவல்­துறை காவ­லில் இருந்­த­போது தன்னை வேறு ஓர் அதி­காரி தாக்­கி­ய­தாக அந்த ஆட­வர் கோரி­யது நிரா­க­ரிக்­கப்­பட்­டு­விட்­டது.

சன்­டெக் சிட்­டி­யில் ஓர் ஆட­வர் தன்­னு­டைய மக­னின் தலையைத் தொட்டு இருக்­கிறார் என்று காவல்­து­றை­யு­டன் தொடர்பு­கொண்டு மாது ஒரு­வர் 2017 ஜூலை 7ஆம் தேதி புகார் அளித்தார்.

காவல்­துறை அதி­கா­ரி­யான முகம்­மது ரோஸ்லி முகம்­ம­தும் அவ­ரு­டைய சக அதி­கா­ரி­யும் அன்று இரவு சுமார் 8 மணிக்கு சம்­பவ இடத்­திற்­குச் சென்­ற­போது அங்கு திரு மா, கல்­லால் ஆன இருக்கையில் அமர்ந்­தி­ருந்­தார்.

இதர இரண்டு அதி­கா­ரி­கள் உத­வி­யு­டன் திரு ரோஸ்லி திரு மாவின் கைக­ளுக்கு விலங்­கிட்டு சட்­டத்­தின்படி அவரை நடத்­தி­னார். திரு மா, மத்­திய காவல்­து­றைப் பிரி­வில் வைக்­கப்­பட்­டார். அவரை டாக்­டர் லிம் ஹான்ஜி என்­ப­வர் பரி­சோ­தித்து திரு மாவை மன­நல நிலை­யத்­திற்­குச் சிகிச்­சைக்­காக அனுப்­பி­னார்.

அந்த நிலை­யத்­திற்கு 2017 ஜூலை 8ஆம் தேதி அதி­காலை 3 மணிக்­குச் சென்­ற­தற்கு முன்­ன­தாக திரு மா வேறோர் அறைக்கு மாற்­றப்­பட்­டார்.

அதே நாளன்று இரவு சுமார் 7 மணிக்கு அந்­தப் பயி­ல­கத்­தில் இருந்து திரு மா விடு­விக்­கப்­பட்­டார். திரு மா, 2020ல் சிங்­கப்­பூர் காவல் துறை­யை­யும் இரண்டு அதி­கா­ரி­க­ளை­யும் பிர­தி­நி­திக்­கும் வகை­யில் தலை­மைச் சட்ட அதி­காரி மீது வழக்­குத் தொடுத்­தார்.

தீர்ப்­ப­ளித்த நீதி­பதி ஃபிலிப் ஜெய­ரத்­னம், திரு மாவுக்கு $20,000 இழப்­பீடு வழங்­கும்­படி உத்­த­ர­விட்­டார்.

திரு மா, நேர­டி­யாக மன­நல நிலை­யத்­திற்கு கொண்டு செல்­லப்­ப­டு­வ­தற்­குப் பதி­லாக கைவி­லங்­கி­டப்­பட்டு காவல்­துறை காவ­லில் வைக்­கப்­பட்­டதை நீதி­பதி கவ­னத்­தில் எடுத்­துக்­கொண்­டார்.