திருவள்ளுவர், ஔவையார், பாரதியார், பாரதிதாசனாரின் பெருமையை எடுத்துக்கூற 'எண்ணமும் வண்ணமும்' என்ற நிகழ்ச்சி நாளை சனிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை லிட்டில் இந்தியாவில் உள்ள 'தேக்கா பிளேசில்' நடைபெறும்.
'கலாமஞ்சரி' எனும் அமைப்பு சிங்கப்பூர் சாதனை புத்தககத்தில் இடம்பெறும் முயற்சியாக இந்த நான்கு தமிழ் சான்றோர்களின் உருவப் படங்களை 'Popsicles' (ஐஸ்க்ரீம் குச்சியைக்) கொண்டு வரைபடமாக வரைய உள்ளது.
லிஷா ஆதரவுடன் 'லிஷா பொங்கல் பண்டிகை 2023'ன் ஓர் அங்கமாக இந்நிகழ்ச்சி இடம்பெற இருக்கின்றது.
சிங்கப்பூர் ரங்கோலி வல்லுநரான திருமதி. சுதா ரவி முதன்மை ஓவியராகவும் செல்வி ரஷிதா ரவி இளையர் ஓவியராகவும் இந்த உருவப்படங்களை உருவாக்குகின்றனர்.

