சிங்கப்பூரின் ஆகப் பெரிய முதலீட்டு மோசடிகளில் ஒன்றான நிக்கல் வர்த்தக மோசடியின் காரணகர்த்தா என்று கூறப்படும் இங் யு ஸிக்கு (படம்) அனுமதிக்கப்பட்டிருந்த $4 மில்லியன் பிணைத்தொகை $6 மில்லியனாக அதிகமாக்கப்பட்டது.
அவருக்கு எதிரான குற்றவியல் வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் அவருக்கு 20 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட சிறைத் தண்டனை கிடைக்கக் கூடும் என்று தெரிகிறது.
இந்த பிணைத்தொகை ஒரு சாதனை அளவுக்கு இருக்கிறது என்று வழக்கறிஞர்கள் சிலர் சொல்கிறார்கள்.
இங், 35, இப்போது விசாரணைக் காவலில் இருக்கிறார்.
பிணைத்தொகை முழுவதும் செலுத்தப்பட்ட பிறகு அவர் வெளியே வர அனுமதிக்கப்படுவார்.
பிணைத்தொகையைப் பெற அவர் மூன்று முறை தொலைபேசியில் பேச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

