அமெரிக்க டாலருக்கு நிகரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு வலுவடைந்து ஈராண்டுக்கு முந்திய உச்சத்தைத் தொட்டு உள்ளது. ஜனவரி 16ஆம் தேதி ஒரு டாலருக்கு 1.3199 என்ற நிலையை சிங்கப்பூர் வெள்ளி எட்டிப் பிடித்தது. இதற்கு முன்னர் 2021 ஜனவரி 7ஆம் தேதி 1.3175 என்று சிங்கப்பூர் வெள்ளி இருந்ததே அதன் உச்சமாக இதுவரை இருந்து வந்துள்ளது.
இருப்பினும் அமெரிக்க டாலருக்கு நிகரான இதர ஆசிய நாடுகளின் நாணய மதிப்பும் உயருவதில் கவனம் செலுத்தும் நாணய வணிகர்கள் அமெரிக்க டாலர் வணிகத்தில் லாபம் ஈட்டி வருகிறார்கள்.
நீண்டகாலக் காத்திருப்புக்குப் பின்னர் சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு உயர்ந்ததன் மூலம் கிடைக்கும் லாபத்தை அனுபவிக்கும் வகையில் வணிகத்தை மேற்கொள்ளுமாறு சிட்டிபேங்க் முதல் கோல்ட்மேன் சாச்ஸ் வரையிலான உலகளாவிய வங்கிகளையும் சிங்கப்பூரின் டிபிஎஸ் வங்கியையும் சேர்ந்த வெளிநாட்டு நாணயச் சந்தை பகுப்பாய்வாளர்கள் பரிந்துரைத்து உள்ளனர்.
சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு வேகமாக உயர்ந்து வருவதாகக் கூறும் டிபிஎஸ் வங்கியின் நாணய உத்தி வகுப்பாளர் பிலிப் வீ, கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்கா டாலருக்கு நிகராக S$1.44 என்னும் ஈராண்டு கீழ்மட்டத்தில் இருந்து இம்மாதம் S$1.32 என்னும் நிலைக்கு உயர்ந்ததை அவர் சுட்டினார்.
இருப்பினும், இதற்கு மேல் வலுவடைந்து 2015ஆம் ஆண்டில் நிகழ்ந்த S$1.31-S$1.45 என்னும் மாற்றம் இப்போது நிகழ்வது கடினம்போலத் தோன்றுவதாக அவர் தெரிவித்தார்.
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதாலும் உலகளாவிய பொருளியல் மந்தம் வரக்கூடும் என்ற அச்சத்தாலும் கடந்த ஆண்டு தன்னுடன் ஒத்த பெரு நாணயங்
களுக்கு எதிராக அதிகபட்சம் 30 விழுக்காடு வரை உயர்ந்தது.
ஆனால், தற்போது அது சந்திக்கும் வீழ்ச்சி மற்ற எல்லா நாணயங்களுக்கும் பயனுள்ளதாக இருப்பதை மெய்நிகராகக் காணமுடிகிறது.

