டாலர் வீழ்ச்சி: ஈராண்டு உச்சத்தைத் தொட்டது சிங்கப்பூர் வெள்ளி மதிப்பு

டாலர் வீழ்ச்சி: ஈராண்டு உச்சத்தைத் தொட்டது சிங்கப்பூர் வெள்ளி மதிப்பு

2 mins read
63fe45fb-a8f5-41a4-8232-ae999be7d53f
-

அமெ­ரிக்க டால­ருக்கு நிக­ரான சிங்­கப்­பூர் வெள்­ளி­யின் மதிப்பு வலு­வ­டைந்து ஈராண்­டுக்கு முந்­திய உச்­சத்­தைத் தொட்டு உள்­ளது. ஜன­வரி 16ஆம் தேதி ஒரு டால­ருக்கு 1.3199 என்ற நிலையை சிங்­கப்­பூர் வெள்ளி எட்­டிப் பிடித்­தது. இதற்கு முன்­னர் 2021 ஜன­வரி 7ஆம் தேதி 1.3175 என்று சிங்­கப்­பூர் வெள்ளி இருந்­ததே அதன் உச்­ச­மாக இது­வரை இருந்து வந்­துள்­ளது.

இருப்­பி­னும் அமெ­ரிக்க டால­ருக்கு நிக­ரான இதர ஆசிய நாடு­க­ளின் நாணய மதிப்­பும் உய­ரு­வ­தில் கவ­னம் செலுத்­தும் நாணய வணி­கர்­கள் அமெ­ரிக்க டாலர் வணி­கத்­தில் லாபம் ஈட்டி வரு­கி­றார்­கள்.

நீண்­ட­கா­லக் காத்­தி­ருப்­புக்­குப் பின்­னர் சிங்­கப்­பூர் வெள்­ளி­யின் மதிப்பு உயர்ந்­த­தன் மூலம் கிடைக்­கும் லாபத்தை அனு­ப­விக்­கும் வகை­யில் வணி­கத்தை மேற்­கொள்­ளு­மாறு சிட்­டி­பேங்க் முதல் கோல்ட்­மேன் சாச்ஸ் வரை­யி­லான உல­க­ளா­விய வங்­கி­க­ளை­யும் சிங்­கப்­பூ­ரின் டிபி­எஸ் வங்­கி­யை­யும் சேர்ந்த வெளி­நாட்டு நாண­யச் சந்தை பகுப்­பாய்­வா­ளர்­கள் பரிந்­து­ரைத்து உள்­ள­னர்.

சிங்­கப்­பூர் வெள்­ளி­யின் மதிப்பு வேக­மாக உயர்ந்து வரு­வ­தா­கக் கூறும் டிபி­எஸ் வங்­கி­யின் நாணய உத்தி வகுப்­பா­ளர் பிலிப் வீ, கடந்த அக்­டோ­பர் மாதம் அமெ­ரிக்கா டால­ருக்கு நிக­ராக S$1.44 என்­னும் ஈராண்­டு கீழ்­மட்­டத்­தில் இருந்து இம்­மா­தம் S$1.32 என்­னும் நிலைக்கு உயர்ந்­ததை அவர் சுட்­டி­னார்.

இருப்­பி­னும், இதற்கு மேல் வலுவடைந்து 2015ஆம் ஆண்­டில் நிகழ்ந்த S$1.31-S$1.45 என்­னும் மாற்­றம் இப்­போது நிகழ்­வது கடி­னம்­போ­லத் தோன்­று­வ­தாக அவர் தெரி­வித்­தார்.

அமெ­ரிக்க மத்­திய வங்கி வட்டி விகி­தத்தை உயர்த்­தி­ய­தா­லும் உல­க­ளா­விய பொரு­ளி­யல் மந்­தம் வரக்­கூ­டும் என்ற அச்­சத்­தா­லும் கடந்த ஆண்டு தன்­னு­டன் ஒத்த பெரு நாண­யங்­

க­ளுக்கு எதி­ராக அதிகபட்சம் 30 விழுக்­காடு வரை உயர்ந்­தது.

ஆனால், தற்­போது அது சந்­திக்­கும் வீழ்ச்சி மற்ற எல்லா நாண­யங்­க­ளுக்­கும் பய­னுள்­ள­தாக இருப்­பதை மெய்­நி­க­ரா­கக் காண­மு­டி­கிறது.