பிப்ரவரி-ஏப்ரல்: வாகன உரிமைச் சான்றிதழ்களின் எண்ணிக்கை உயரும்

பிப்ரவரி-ஏப்ரல்: வாகன உரிமைச் சான்றிதழ்களின் எண்ணிக்கை உயரும்

1 mins read
10ab81d5-42da-4152-88ed-79d6cec0833a
-

இவ்­வாண்டு பிப்­ர­வரி முதல் ஏப்­ரல் வரை, 3.4 விழுக்­காடு கூடு­த­லாக வாகன உரி­மைச் சான்­றி­தழ்­கள் (சிஓஇ) வழங்­கப்­ப­ட­வுள்­ளன. கடந்த இரண்டு காலாண்­டு­க­ளாக குறைந்த அந்த எண்­ணிக்கை அடுத்த மூன்று மாதங்­க­ளுக்கு உய­ர­வுள்­ளது.

சரா­ச­ரி­யாக, சான்­றி­த­ழுக்­கான ஐந்து பிரி­வு­க­ளி­லும் ஒவ்­வொரு மாத­மும் சரா­ச­ரி­யாக 3,144 வாகன உரி­மைச் சான்­றி­தழ்­கள் வழங்­கப்­படும் என்று நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் நேற்று கூறி­யது.

ஒப்­பு­நோக்க, 2022 நவம்­பர் முதல் 2023 ஜன­வரி வரை மாதம் சரா­ச­ரி­யாக 3,040 வாகன உரி­மைச் சான்­றி­தழ்­கள் வழங்­கப்­பட்­டன. சிஓஇ எண்­ணிக்கை அதி­க­ரிப்­ப­தால், கட்­ட­ணங்­கள் குறைய வாய்ப்­புள்­ளது.

பிப்­ர­வரி முதல் ஏப்­ரல் வரை­யி­லான சிஓஇ சான்­றி­தழ்­க­ளின் எண்­ணிக்­கை­யைக் கணக்­கி­டும் முறையை நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் மீண்­டும் மாற்­றி­யது.

சான்­றி­தழ்­க­ளின் எண்­ணிக்­கை­யில் ஏற்ற இறக்­கத்­தைத் தவிர்க்க, கடந்த ஆண்டு ஜூலை­யில் அவற்­றைக் கணக்­கி­டும் விதம் ஏற்­கெ­னவே ஒரு முறை மாற்­றப்­பட்­டது.

முந்­தைய நான்கு காலாண்­டு­களில் பதிவு நீக்­கம் செய்­யப்­பட்ட வாக­னங்­க­ளின் அதே மொத்த சரா­சரி எண்­ணிக்­கை­யில் புதிய சான்­றி­தழ்­களை வழங்­கும் முறை பிப்­ர­வ­ரி­யி­லி­ருந்து நடப்­புக்கு வரும். தற்­போது இரண்டு காலாண்டு­கள் கணக்­கில் கொள்­ளப்­ப­டு­கின்­றன.

ஒவ்­வொரு காலாண்­டும் சிஓஇ எண்­ணிக்கை மேலும் கீழும் இறங்­கு­வ­தைத் தவிர்க்­கவே புதிய முறை­யில் எண்­ணிக்கை கணக்­கி­டப்­படும் என்று நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் தெரி­வித்­தது.