இல்லப் பணிப்பெண்ணைக் கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டுகளிலிருந்து இந்திய மாது விடுவிப்பு

இல்லப் பணிப்பெண்ணைக் கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டுகளிலிருந்து இந்திய மாது விடுவிப்பு

2 mins read
b92d4232-6129-4729-a98c-ae9d28633a3b
-

தனது இல்­லப் பணிப்­பெண்­ணைக் கொடு­மைப்­ப­டுத்­தி­ய­தா­க­வும் போலி ஆவ­ணங்­க­ளைத் தயா­ரித்­த­தா­க­வும் குற்­றஞ்­சு­மத்­தப்­பட்­டி­ருந்த மாது, வழக்­கு­வி­சா­ர­ணை­யைத் தொடர்ந்து குற்­ற­மற்­ற­வர் என்று கரு­தப்­பட்டு குற்­றங்­ க­ளி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்­டுள்­ளார்.

இந்­தி­யா­வைச் சேர்ந்­த­வ­ரும் சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சி­யு­மான கெட்­டாக்கி ராய், 36, குற்­ற­மற்­ற­வர் என்று நீதி­மன்­றம் நேற்று முன்­தி­னம் தீர்ப்­ப­ளித்­தது. அதன்­வழி, அதே குற்­றச்­சாட்டு­களை அவர்­மீது மீண்­டும் சுமத்த முடி­யாது.

அந்த வழக்­கில் தொடர்­பு­டைய மேலும் இரு­வ­ரும் அதே­போன்ற குற்­றத்­தி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்­டுள்­ள­னர். இந்­தி­யக் குடி­ம­க­ளான வர்ஷா ரே, 28, அஜேய் ராய் லால்­ஹர், 43, ஆகி­யோர் மீது போலி ஆவ­ணம் தயா­ரித்­த­தாக தலா ஒரு குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டி­ருந்­தது.

இல்­லப் பணிப்­பெண் சுசி ரிமா­சாரி, வழக்­கு­ வி­சா­ரணை தொடங்­கும் முன்­னரே சிங்­கப்­பூரை விட்டு வெளி­யே­றி­ய­தால் அவ்­வாறு தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.

திரு­வாட்டி சுசி சாட்­சி­யம் அளிக்க விரும்­ப­வில்லை என்­ப­தை­யும் வழக்­கில் சாட்­சி­யம் அளிப்­ப­தற்­காக அர­சாங்க வழக்­க­றி­ஞர்­கள் அவ­ரைத் தேட போது­மான அளவு முயற்சி எடுத்­தனர்­என்­ப­தை­யும் மாவட்ட நீதி­பதி ரோனல்ட் குவீ சுட்­டிக்­காட்­டி­னார்.

இந்­நிலை குற்­றஞ்­சாட்­டப்­பட்­ட­வர்­க­ளுக்கு பாத­க­மாக அமைந்து விட்­டது என்­றும் குற்­றம் சுமத்­தி­ய­வர் குறுக்கு விசா­ர­ணையை எதிர்­கொள்ள நீதி­மன்­றத்­துக்கு வந்­தி­ருக்க வேண்­டும் என்­றும் நீதி­பதி கூறி­னார்.

திரு­வாட்டி கெட்­டாக்கி, திரு­வாட்டி சுசியை 2015ல் ஒரு முறை­யும் 2016ல் ஒரு முறை­யும் அறைந்­தார் என்­றும் போலி சம்­பள ரசீ­து­ களை மனி­த­வள அமைச்­சி­டம் ஒப்­ப­டைத்­தார் என்­றும் கூறப்­பட்­டது.

கெட்­டாக்­கி­யும் அவ­ரது மைத்­து­னர் அஜேய், அவ­ரது மனைவி வர்ஷா இரு­வ­ரு­ட­னும் சேர்ந்து பணிப்­பெண் சுசி கையொப்­பம் உள்ள போலி மன்­னிப்பு கடி­தத்­தைத் தயா­ரித்­த­னர் என்­றும் குறிப்­பி­டப்­பட்­டது.

அனு­ம­தி­யின்றி பணத்­தை­யும் பொரு­ளை­யும் எடுத்­தது உள்­ளிட்ட பல்­வேறு தவ­று­களை சுசி செய்­த­தற்­காக கெட்­டாக்கி அவரை ஏசி­னாரே தவிர காயம் ஏற்­ப­டுத்­த­வில்லை என்று அவ­ரது வழக்­க­றி­ஞர் வாதிட்­டார்.

2016 ஜூனில் சுசி பணி­யி­டத்­தி­லி­ருந்து வெளி­யேறி, தான் கொடு­மைக்கு ஆளா­ன­தா­க­வும் தமக்கு உரிய சம்­ப­ளம் தரப்­ப­ட­வில்லை என்­றும் உதவி கேட்­டார்.