மருத்துவப் பராமரிப்புக் குழும நிறுவனரின் தடுப்புக் காவல் ஒரு வாரத்துக்கு நீட்டிப்பு

மருத்துவப் பராமரிப்புக் குழும நிறுவனரின் தடுப்புக் காவல் ஒரு வாரத்துக்கு நீட்டிப்பு

1 mins read
e689e608-0602-4f8a-9cfb-41339c84dfc4
-

நொவீனா குளோ­பல் ஹெல்த்­கேர் குருப் (என்­ஜி­எச்ஜி) எனும் மருத்­து­வப் பரா­ம­ரிப்­புக் குழு­மத்­தைத் தோற்­று­வித்­த­வர்­களில் ஒரு­வ­ரான நெல்­சன் லோ நெ-லூன், 43, மேலும் ஒரு வாரத்­துக்­குத் தடுப்­புக்­கா­வ­லில் வைக்­கப்­ப­டு­வார்.

போலி ஆவ­ணங்­க­ளின் தொடர்­பில் அவர்­மீது சென்ற டிசம்­பர் மாதம் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டது. 2019ல் என்­ஜி­எச்ஜி நிறு­வ­னத்­தின் போலி நிதி அறிக்­கை­யைத் தயா­ரித்து, அவற்­றைக் கொண்டு $18 மில்­லி­யன் வங்­கிக் கடன் பெற்­ற­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த 13ஆம் தேதி நீதி­மன்­றத்­தில் முன்­னி­றுத்­தப்­பட்ட லோ, தமது குடும்­பத்தை நீண்­ட­கா­லா­மா­கப் பார்க்­க­வில்லை என்று கூறி­யி­ருந்­தார். லோ மீதான வழக்கு விசா­ரிக்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் அதைத் துரி­தப்­ப­டுத்­தும்­படி விசா­ரணை அதி­கா­ரி­க­ளி­டம் காவல்­துறை கூறி­யுள்­ள­தா­க­வும் காவல்­துறை வழக்­க­றி­ஞர் நேற்று நீதி­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

லோவின் ஊழி­யர் மைக்­கல் வோங், நீதி­மன்­றத்­தில் நேற்று முன்­னி­றுத்­தப்­பட்­ட­போது, பிணை­கோரி­னார். ஆனால் வோங் சூன் யூ என்­றும் அழைக்­கப்­படும் அவ­ரது வழக்கு இன்­ன­மும் விசா­ரிக்­கப்­பட்டு வரு­வ­தால் பிணை மனு நிரா­க­ரிக்­கப்­பட்­டது.

ஈராண்­டு­க­ளுக்கு முன்­னர் நாட்டை விட்டு வெளி­யே­றிய அந்த இரு­வ­ரை­யும் காவல் துறை தேடி வந்­தது. சீனா­வின் உத­வி­யு­டன் அவர்­கள் 2022, டிசம்­பர் 24ஆம் தேதி சிங்­கப்­பூர் கொண்டு வரப்­பட்­ட­னர்.

நெல்­சன் லோவும் அவ­ரது உற­வுக்­கா­ரர் டெரன்ஸ் லோவும் இணைந்து என்­ஜி­எச்ஜி நிறு­வ­னத்­தைத் தொடங்­கி­னர்.

இங்­கிலிஷ் பிரி­மி­யர் லீக்­கைச் சேர்ந்த நியூ­கா­சல் யுனைட் குழுவை 280 மில்­லி­யன் பவுண்ட் (S$460 மில்­லி­யன்) கொடுத்து வாங்க முயன்­ற­தற்­காக அவர்­கள் இரு­வ­ரும் முதன்­மு­த­லில் அனை­வ­ரின் கவ­னத்தை ஈர்த்த­னர்.