சிங்கப்பூர்-போர்ச்சுக்கல் ஒத்துழைப்பு வாய்ப்புகள்

சிங்கப்பூர்-போர்ச்சுக்கல் ஒத்துழைப்பு வாய்ப்புகள்

1 mins read
3264d869-df90-4908-bc6f-d4011d95e108
-

உல­கப் பொரு­ளி­யல் நிச்­ச­ய­மில்­லாத நிலை­யில் இருக்­கிறது.

இந்­தச் சூழ­லில் தள­வா­டப் போக்கு­வ­ரத்து, சுற்­றுப்புறத்­திற்கு உகந்த எரி­பொ­ருள் ஆகி­ய­வற்றில் சிங்­கப்­பூ­ரும் போர்ச் சுக்கல் நாடும் ஒத்­து­ழைப்பை அதி­கப்­ப­டுத்த வாய்ப்­பு­கள் இருப்­ப­தாக போர்ச்­சுக்­கல் வெளி யு­றவு அமைச்­சர் ஜாவோ கோமிஸ் கிரே­வின்கோ தெரிவித்­தார்.

இரண்டு நாடு­க­ளின் மக்­களுக்கு இடை­யே தொடர்­பு­களை அதி­க­மாக்­க­வும் வாய்ப்­பு­கள் இருக்­கின்­றன. அதோடு, தொழில்­து­றை­யி­னர், அறி­வி­யல் அறி­ஞர்­கள், பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் ஆகி­யோ­ருக்கு இடை­யில் தொடர்­பு­களை அதி­கரிக்­க­வும் வாய்ப்­பு­கள் இருப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டார்

ஆர்ச்சர்ட் ரோடு பகு­தி­யில் உள்ள வின்ஸ்­வேண்ட் ஹவுஸ்-Iல் செயல்­படும் போர்ச்­சுக்­கல் தூத­ர­கத்­தில் கிரே­வின்கோ பேட்டி அளித்­தார். சிங்­கப்­பூருக்கும் போர்ச்­சக்­க­லுக்­கும இடை­யில் அர­ச­தந்­திர உறவு ஏற்­பட்டு 2021ல் 40 ஆண்­டு­கள் நிறை­வ­டைந்­தன.

சுற்­றுச்­சூ­ழ­லுக்கு உகந்த எரி­பொ­ரு­ளுக்கு மாறு­வ­து­என்­பது சிங்­கப்­பூர் உள்­ளிட்ட அனைத்து நாடு­க­ளுக்­குமே ஒரு சவால் என்று தெரி­வித்த அவர், இரு­நா­டு­களும் ஒத்­து­ழைக்க அந்­தத் துறையில் வாய்ப்­பு­க­ள் இருப்பதாகக் குறிப்­பிட்­டா­ரர்.

இரு நாடு­க­ளின் மக்­க­ளுக்கு இடைப்­பட்ட தொடர்பு பற்றி கருத்து கூறிய அவர், இரு­நாடு­களை­யும் சேர்ந்த தொழில்­து­றை­யி­ன­ரில் மேலும் பலர் இரு நாடு­க­ளுக்­கும் இடை­யில் பய­ணம் மேற்­கொள்ள முடி­யும் என்­றார்.

போர்ச்­சுக்­கல் நாட்­டுக்குத் தொழில்­துறை தலை­வர்­கள் செல்­லும்­போது அங்­குள்ள வாய்ப்­பு­களைக் கண்டு அவர்கள் வியந்­து­போ­வார்­கள் என்றும் அவர்களை வரவேற்க போர்ச்சுக்கல் தயாராக இருப்பதாகவும் வெளி­யு­றவு அமைச்­சர் குறிப்­பிட்­டார்.