சிங்கப்பூரைச் சேர்ந்த கோ சுவான் லாம் என்ற ஆசிரியர் சென்ற ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி தன்னுடைய 50வது பிறந்தநாளன்று அண்டார்டிகாவின் போர்ட் லாக்ரே சென்று சாதனை படைத்தார்.
அவர் "உலகைச் சுற்றி நான்கு பாலைவனங்கள் பெரு நெட்டோட்டத் தொடர்' என்ற போட்டியில் கலந்துகொண்டு அதன் ஒரு பகுதியாக அண்டார்டிகா சாதனை படைத்தார்.
அந்தப் போட்டி, உலகிலேயே மிகக் கடினமான 10 போட்டிகளில் ஒன்று என்று 2010ஆம் ஆண்டில் டைம் மேகசின் வர்ணித்தது.
அண்டார்டிகா போட்டிக்குத் தகுதி பெற திரு கோ நான்கு பாலைவன பந்தயத் தொடர் போட்டிகளை வெற்றிகரமான முறையில் முடித்தார். திரு கோ, ஆறு மாங்களுக்கு முன் இடுப்பு உறுப்பு மாற்று சிகிச்சையைச் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

