50 வயது ஆசிரியர் சாதனை

50 வயது ஆசிரியர் சாதனை

1 mins read
c0b90248-59cd-4804-a621-48a8a18dea0d
-

சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த கோ சுவான் லாம் என்ற ஆசி­ரி­யர் சென்ற ஆண்டு நவம்­பர் 26ஆம் தேதி தன்­னு­டைய 50வது பிறந்­த­நா­ளன்று அண்­டார்­டி­கா­வின் போர்ட் லாக்ரே சென்று சாதனை படைத்­தார்.

அவர் "உல­கைச் சுற்றி நான்கு பாலை­வ­னங்­கள் பெரு நெட்­டோட்­டத் தொடர்' என்ற போட்­டி­யில் கலந்­து­கொண்டு அதன் ஒரு பகு­தி­யாக அண்­டார்­டிகா சாதனை படைத்தார்.

அந்­தப் போட்டி, உல­கிலேயே மிகக் கடி­ன­மான 10 போட்­டி­களில் ஒன்று என்று 2010ஆம் ஆண்­டில் டைம் மேக­சின் வர்­ணித்­தது.

அண்­டார்­டிகா போட்­டிக்­குத் தகுதி பெற திரு கோ நான்கு பாலை­வன பந்­த­யத் தொடர் போட்டிகளை வெற்­றி­க­ர­மான முறை­யில் முடித்­தார். திரு கோ, ஆறு மாங்களுக்கு முன் இடுப்பு உறுப்பு மாற்று சிகிச்சையைச் செய்­து­கொண்­டார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.