இணைய வர்த்தக விதிகளை உருவாக்க உறுதி, இலக்கு

இணைய வர்த்தக விதிகளை உருவாக்க உறுதி, இலக்கு

1 mins read
80e9fcd6-59cc-460d-a300-32d2fa155c69
-

இணைய வர்த்­த­கத்தை மேம்­படுத்­து­வது, அதற்­கான வச­தி­களை ஏற்­ப­டுத்­தித் தரு­வது ஆகி­யவை தொடர்­பான அனைத்­து­லக விதி­மு­றை­களை உரு­வாக்­கும் முயற்­சி­யில் பல நாடு­கள் ஈடு­பட்டு இருக்­கின்­றன.

அந்த நாடு­கள், டாவோஸ் நக­ரில் நடக்­கும் உல­கப் பொரு­ளி­யல் அரங்­கம் அமைப்­பை­யொட்டி வெள்­ளிக்­கி­ழமை சந்­தித்­தன.

பேச்­சு­வார்த்­தை­களை முடித்து இந்த ஆண்டு இறு­திக்­குள் ஓர் உடன்­பாட்­டுக்­குள் வர­வேண்­டும் என்று அவை இலக்கு நிர்­ண­யித்து இருக்­கின்­றன.

இதன் தொடர்­பில் உலக வர்த்­தக நிறு­வ­னத்­தின் 22 உறுப்பு நாடு­களும் இணைய வர்த்­த­கம் பற்­றிய கூட்­ட­றிக்­கையை வெளி­யிட்­டன.

அந்த நாடு­கள் டாவோ­ஸில் சந்­தித்­துப் பேசின. உல­க­ள­வில் மின்­னி­லக்­கப் பொரு­ளி­யலைக் கட்­டுப்­ப­டுத்­தும் அடிப்­படை விதி­களை ஏற்­ப­டுத்த வேண்­டும் என்று அந்த நாடு­கள் உறுதி கூறின.

சிங்­கப்­பூர் அந்த முயற்­சியை ஆஸ்­தி­ரே­லியா, ஜப்­பான் நாடு­களு­டன் சேர்ந்து 2017ல் தொடங்­கி­யது. பேச்­சு­வார்த்­தை­களில் உலக வர்த்­தக நிறு­வ­னத்­தின் 87 உறுப்­பி­னர்­கள் கலந்­து­கொள்­கி­றார்­கள்.