இலகு சரக்கு வாகனங்களை (வேன்கள்) சட்டவிரோதமாக
மாற்றியமைப்பவர்களுக்கு $5,000 வரை அபராதம், அதிகபட்சம் மூன்று மாத சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். இக்குற்றத்தைத் தொடர்ந்து புரிபவர்களுக்குத் தண்டனை இரட்டிப்பாகும்.
இலகு சரக்கு வாகனங்களின் பின்பகுதியில் சரக்குகளை மட்டும் ஏற்றிச் செல்லலாம். இத்தகைய வாகனங்களின் பின்பகுதியில் பயணிகள் அமர்வதற்கான இருக்கைகளைப் பொருத்தினால் அது சட்டவிரோதமான
செயலாகிவிடும்.
2021ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஆண்டு வரை வாகன உரிமைச் சான்றிதழ் ஏற்றம் கண்டிருப்பதால் கார்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இதனால் பலருக்கு கார் வாங்குவது கட்டுப்படியாகாத ஒன்றாகி விட்டது.
எனவே, தங்களது இலகு சரக்கு வாகனங்களிலேயே
பயணிகளை ஏற்றிச் செல்ல சிலர் தங்கள் வாகனங்களை மாற்றி அமைப்பதாகக் கூறப்படுகிறது.
பின்பகுதியில் இருக்கை
களைப் பொருத்துவதற்குக் குறிப்பிட்ட சில பாதுகாப்பு அம்சங்
களைக் கொண்டிருந்து, அதற்கான தேவைகளை இலகு சரக்கு வாகனம் பூர்த்தி செய்தால் அதை சிறு பேருந்து அல்லது சரக்கு-பயணி வாகனமாக மாற்ற வாகன உரிமையாளர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று நிலப் போக்கு வரத்து ஆணையம் தெரிவித்தது.
இலகு சரக்கு வாகனங்கள் போன்ற வர்த்தக வாகனங்களை வர்த்தகர்கள், உணவங்காடிக் கடைக்காரர்கள், விவசாயிகள் போன்றோர் வாங்கலாம்.
இருப்பினும், வர்த்தக வாகனங்களை வாங்குவதற்காகவே தனிநபர் சிலர் நிறுவனங்களைப் பதிவு செய்வதும் உண்டு என்று கூறப்படுகிறது.
இத்தகைய போக்கு அண்மைக் காலங்களில் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கெரோசல் போன்ற மின்வரத்தகத் தளங்களில் இலகு சரக்கு வாகனங்
களின் பின்பகுதியில் பொருத்தப்படும் இருக்கைகள் தொடர்பான விளம்பரங்கள் இருப்பதை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கண்டுபிடித்துள்ளது.

