சிறாருக்கான கதை சொல்லும் நிகழ்வு

சிறாருக்கான கதை சொல்லும் நிகழ்வு

1 mins read
038ce68d-c07b-47c8-9dce-0424b5f1dbfa
-

மோன­லிசா

தமிழ் எழுத்­து­களை சிறுவர்கள் கற்­க­வும் புத்­த­கம் வாசிக்­கும் பழக்­கத்தை வளர்க்­க­வும் அண்­மை­யில் கதை சொல்­லும் நிகழ்வு ஒன்று நடை­பெற்­றது.

'தி ஆர்ட்ஸ் ஹவுஸ்' ஏற்­பாட்­டில் நடை­பெற்ற இந்­நி­கழ்­வில் சிண்டாவின் ஆதரவுடன் சிறுவர்கள் பங்குபெற்றனர்.

'கிரி­யைடி எஸ்ஜி' (KriyaiD SG) எனும் சமூக நிறு­வ­னத்­தின் இணை நிறு­வ­ன­ரும் எழுத்­தா­ள­ரு­மான 34 வயது தேவி விஜ­யன் இந்­நி­கழ்­வில் தன்­னு­டைய 'அன்­பான அ' எனும் நன்­னெறி புத்­த­கத்­தின் கதையைச் சிறுவர்களுக்குக் கூறி­னார். சிறுவர்களின் ஆர்­வத்தை தூண்­டும் வகை­யில், கதை­யை­யொட்­டிய கேள்வி-பதில் அங்­க­மும் விளை­யாட்­டு­ களும் நடை­பெற்­றன.

"சிறா­ரின் கவ­னத்தை ஈர்ப்­பது மிக­வும் சவால்­மிக்­கது. அவர்­க­ளது கவ­னம் எளி­தில் சித­றி­வி­டும். அவர்­க­ளுக்கு சுவா­ர­சி­ய­மான முறை­யில் கதை­யின் வழி­யாக வாழ்­

வி­யல் கருத்­துக்­க­ளைக் கூறு­வது தனிப்­பட்ட முறை­யில் எனக்கு மிகுந்த மன­நி­றை­வைத் தரு­கிறது" என்று கூறி­னார் திரு­வாட்டி தேவி. மேலும் இந்­நி­கழ்­வில் சிறு­வர்­கள் தங்­க­ளு­டைய பெற்­றோ­ரு­டன் இணைந்து காகி­தங்­களில் வரை­யப்­பட்ட கோலங்­

க­ளுக்கு வண்­ணம் தீட்டி அலங்­

க­ரிக்­கும் அங்­க­மும் இடம்­பெற்­றது. இம்­மா­தம் 8ஆம் தேதி உட்­லண்ட்ஸ் வட்­டார நூல­கத்­தில் நடை­பெற்ற இந்­நி­கழ்­வில் நான்கு முதல் ஒன்­பது வய­திற்­குட்­பட்ட மாண­வர்­கள் பங்­கு­பெற்­ற­னர்.

"ஆசி­ரி­யர் கூறிய கதை சிறப்பாக இருந்­தது. அம்­மா­வு­டன் சேர்ந்து வண்­ணப் பொடி­யில் முதன்­மு­த­லில் கோல­மிட்­டது எனக்கு மிக­வும் பிடித்­தி­ருந்­தது" என்று கதை சொல்­லும் நிகழ்­வில் பங்­கேற்ற சிறுவர்­களில் ஒரு­வ­ரான 5 வயது பாலர் பள்ளி மாண­வர் சுகந்­தன் மகிழ்ச்­சி­யு­டன் தெரி­வித்­தார்.