போலி கியூஆர் குறியீடுகளைப் பயன்படுத்தி நடத்தப்படும் மோசடி குறித்து எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. பார்ப்பதற்கு நகராட்சி சேவை அலுவலகத்தின் கியூஆர் குறியீடு போல இருக்கும் அந்தப் போலி குறியீடுகளை புக்கிட் பாத்தோக் குடியிருப் பாளர் குழுக்கள் கண்டுபிடித்தன.
போலி குறியூடுகளைக் கொண்ட சுவரொட்டிகள் புக்கிட் பாத்தோக் வட்டாரத்தில் உள்ள சில வீடமைப்பு வளரச்சிக் கழக குடியிருப்புக் கட்டடங்களின் மின்தூக்கித் தளங்களில் ஒட்டவைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அதை உண்மையான கியூஆர் குறியீடு என்று நம்பி ஸ்கேன் செய்தவர்களை அந்தப் போலி குறியீடு கருத்துசேகரிப்புப் படிவம் கொண்ட இணையத் தளத்துக்குக் கொண்டு சென்றது. படிவத்தில் ஸ்கேன் செய்தோரின் தனிப்பட்ட விவரங்கள் கேட்கப்பட்டன.
போலி குறியீடுகளைக் கொண்ட சுவரொட்டிகளை குடியிருப்பாளர் குழுக்கள் உடனடியாக அகற்றிவிட்ட தாகத் ெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி குறியீடுகள் குறித்து மற்ற நகர மன்றங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக நகராட்சி சேவை அலுவலகம் தெரிவித்துள்ளது. குடியிருப்புப் பேட்டைகளில் சுவரொட்டிகளில் ஒட்டப் பட்டிருக்கும் தனது கியூஆர் குறியீடுகள் உண்மையான வையா என்பதை உறுதி செய்ய அது நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மோசடி இணையப்பக்கம் முடக்கப்பட்டுள்ளது.

