மூன்று கொவிட்-19 அலைகளுடன் போராடிய சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு 2022 சவாலான ஆண்டு: ஓங் யீ காங்

மூன்று கொவிட்-19 அலைகளுடன் போராடிய சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு 2022 சவாலான ஆண்டு: ஓங் யீ காங்

1 mins read
41af6e86-373b-4f39-872b-1f29a39b2ca7
-

பெரும்பாலான சிங்கப்பூரர்களுக்கு 2022ஆம் ஆண்டு வழக்கமான ஆண்டாக மாறியது. ஆனால் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு சென்றாண்டு சவால்மிக்க ஆண்டாக அமைந்தது. அதற்கு காரணம் அவர்கள் மூன்று கொவிட்-19 அலைகளுடன் போராயதுதான் என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் கூறியுள்ளார்.

சீனப் புத்தாண்டு முதல் நாளான நேற்று அவர் செங்காங் பொது மருத்துவமனைக்கு வருகையளித்தார்.

சிங்கப்பூரில் சென்றாண்டு மூன்று கொவிட்-19 அலைகள் தலைகாட்டின. ஓமிக்ரான் பிஏ.2, ஓமிக்ரான் பிஏ.5, எக்ஸ்பிபி ஆகிய கிருமி தொற்று சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக இங்கு கண்டுபிடிக்கப்பட்டன.

மருத்துவமனை ஊழியர்கள், சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் ஆகியோருக்கு தனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டதோடு அவர்களுக்கு ஆராஞ்சுப் பழங்களையும் அமைச்சர் வழங்கினார்.

சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் ஆற்றிய பணிக்கு தனது நன்றியை திரு ஓங் தெரிவித்துக்கொண்டார்.