சீனாவுடன் வர்த்தகம் பெருக தொழில் சபை பங்கு முக்கியம்

சீனாவுடன் வர்த்தகம் பெருக தொழில் சபை பங்கு முக்கியம்

2 mins read
67185625-40bb-4e94-b245-6fcc41a595f5
-

உள்ளூர் நிறுவனங்களுக்கு உதவும்படி சீன வர்த்தக தொழில் சபைக்கு அதிபர் வலியுறுத்து

உல­கின் இரண்­டா­வது ஆகப்­பெரிய பொரு­ளி­ய­லா­கத் திக­ழும் சீனா­வு­டன் கூடிய வர்த்­தக, முத­லீட்டுத் தொடர்­பு­களை மேலும் மேம்­ப­டுத்­து­வ­தில் சிங்­கப்­பூர் சீன வர்த்­தக, தொழில் சபை தொடர்ந்து முக்­கிய பணியை ஆற்­றி­வ­ரும் என்று அதி­பர் ஹலிமா யாக்­கோப் நம்­பிக்கை தெரி­வித்­தார்.

கொவிட்-19 தொற்று காலத்­தில் சிங்­கப்­பூர்-சீனா­வுக்கு இடை­யில் தொழில்­துறைத் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்­தித் தந்து அதன் மூலம் இந்­தச் சபை பெரி­தும் உதவியுள்ளதாக இருக்­கிறது என்றார் அதி­பர் கூறி­னார்.

சீனா இப்­போது எல்­லை­களைத் திறந்­து­விட்டு கட்­டுப்­பாடு­க­ளைத் தளர்த்தி இருக்­கிறது. இந்­தச் சூழ­லில் அந்­தச் சபை­யின் செயல்­பா­டு­கள் மேலும் முக்­கி­யத்­து­வம் வாய்ந்­த­வை­யாக இருக்­கும் என்று திரு­வாட்டி ஹலிமா குறிப்­பிட்­டார்.

பிசி­னஸ் சைனா அமைப்­பும் சிங்­கப்­பூர் சீன வர்த்­தக தொழில் சபை­யும் கூட்­டாக ஏற்­பாடு செய்த சீனப் புத்­தாண்­டுக் கொண்­டாட்ட நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்டு அதி­பர் உரை­யாற்­றி­னார்.

சீனா­வு­டன் கூடிய சிங்­கப்­பூ­ரின் தாராள வர்த்­தக உடன்­பாட்டை மேம்­ப­டுத்­தும் பணி­கள் நடந்­து­வ­ரு­வ­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­க­ளுக்கு சீனா­வில் முத­லீட்டு வாய்ப்பு­களை மேலும் அதி­க­மாக்­கு­வது இதன் நோக்­கம் என்­றும் அதி­பர் ஹலிமா கூறி­னார்.

மின்­னி­லக்­கம், கரி­மக் கழி­வற்ற பொருளியல் போன்ற துறை­களில் சீனா­வு­டன் கூடிய பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்பை சிங்­கப்­பூர் தொடர்ந்து விரி­வு­ப­டுத்­தும்.

சேவை வழங்­கீட்டு கட்­ட­மைப்பை ஆழப்­ப­டுத்­தும் என்­றும் அதி­பர் கூறி­னார்.

இத­னி­டையே, நிகழ்ச்­சி­யில் உரை­யாற்­றிய சீன வர்த்­தக தொழில் சபை­யின் தலை­வர் கூ சூன் கெங், உல­கப் பொரு­ளி­யல் நில­வ­ரங்­கள் நிலை­யில்­லா­மல் இருக்­கின்­றன என்­றாா­லும்­கூட வாய்ப்­பு­கள் உள்­ள­தா­கத் தெரி­வித்­தார்.

மீள்­தி­றன், ஊக்­கம், புத்­தாக்­கத்­து­டன் திகழ வேண்­டும் என்ற உறு­தி­யு­டன் சிங்­கப்­பூர் நிறு­வனங்­கள் செயல்­பட்­டால் புதிய உச்­சத்தை எட்ட முடி­யும் என்று அவர் வலி­யு­றுத்­திக் கூறி­னார்.

உல­கம் முழு­வ­தி­லும் உள்ள நாடு­க­ளு­டன் சிங்­கப்­பூர் ஏற்­படுத்­திக் கொண்­டுள்ள வர்த்­தக உடன்­பாட்­டுக் கட்­ட­மைப்­பு­களை அவர் சுட்­டி­னார்.

சிறிய நாடான சிங்­கப்­பூர் பெரும் சந்­தை­களில் ஊடு­ருவி உள்ளே இடம்­பி­டிக்க வேண்டும்; ஒத்­து­ழைப்­புக்­குக் கத­வைத் திறந்­து­வைத்­தி­ருக்க வேண்­டும்; ஆற்றல்மிகு திற­னார்­களை வர­வேற்க வேண்­டும்.

இப்­படி இருந்­தால்­தான் சிங்­கப்­பூர் தனது பொரு­ளி­யல் வளர்ச்­சியை விரிவு­ப­டுத்த முடி­யும் என்­றும் நிகழ்ச்சியில் பேசிய திரு கூ குறிப்­பிட்­டார்.