வழிபாட்டிடங்களில் வெள்ளைநிற பொருள்: மூவர் கைது

வழிபாட்டிடங்களில் வெள்ளைநிற பொருள்: மூவர் கைது

1 mins read
e0903c5f-1c7f-4e2d-86e1-16c63726f792
-

வாட்­டர்லூ ஸ்தி­ரீட்­டில் உள்ள கத்­தோ­லிக்க நிலையத்திலும் ஆர்­மீ­னி­யன் ஸ்தி­ரீட்­டில் உள்ள பைபிள் ஹவு­சி­லும் வெள்ளை நிறப் பொருள்­கள் காணப்­பட்ட விவ­கா­ரத்­தில் தொடர்­பு­டை­ய­வர்­கள் என்று கூறப்­படும் மூன்று பேரை காவல்­துறை கைது செய்து இருக்­கிறது.

அந்த மூவ­ரில் இரு­வர் 52, 66 வய­துள்ள ஆட­வர்­கள். மற்­றொ­ரு­வர் 63 வயது மாது.

பொது­மக்­க­ளுக்குத் தொல்லை கொடுத்­த­தா­கக் கூறப்­படும் குற்றச்­செ­யல் பற்றி புலன்­வி­சாரணை நடந்து வரு­வ­தாக காவல்­துறை தெரி­வித்­தது.

புலன்­வி­சா­ர­ணை­யில் இந்த மூவ­ரை­யும் சேர்த்து மொத்­தம் 11 பேர் உதவி வரு­கி­றார்­கள் என்றும் தெரி­விக்­கப்­பட்டுள்­ளது.