'சக்கரங்களை சட்டவிரோதமாக மாற்றுவது ஆபத்துகளை விலைக்கு வாங்குவதாகும்'

'சக்கரங்களை சட்டவிரோதமாக மாற்றுவது ஆபத்துகளை விலைக்கு வாங்குவதாகும்'

2 mins read
527aea08-53ab-4fbe-af6b-39786606c3ec
-

மோட்­டார்­சைக்­கிள்­களில் வேறுவித டயர்­களைப் பொருத்­து­வது, பின் சக்­க­ரத்தை வண்­டி­யு­டன் இணைக்­கும் பட்­டயை நீட்டி வைத்­துக்­கொள்­வது போன்ற மாற்­றங்­கள் அழ­காக இருக்­க­லாம்.

இருந்­தா­லும் அத்­த­கைய மாற்றங்­கள் சட்ட விரோ­த­மா­னவை. அவை ஆபத்தை விலைக்கு வாங்குவதா­கவே இருக்­கும் என்று வல்­லு­நர்­கள் எச்­ச­ரித்து இருக்­கி­றார்­கள்.

ஒரு புதிய பாணி இப்­போது தலைதூக்கி இருக்­கிறது.

சிறிய, 200 சிசிக்குக் குறை­வான மோட்­டார்­சைக்­கிள்­களில் பின் சக்­க­ரத்தை வண்­டி­யு­டன் இணைக்­கும் பட்­டை­களை நீட்டி வைத்­துக்­கொள்­வது, ஒல்­லி­யான டயர்­க­ளைப் பொருத்­து­வது போன்­றவை இடம்­பெ­று­கின்­றன.

இப்­படி மாற்­று­வ­தால் வண்டி வேக­மா­கச் செல்­லும் என்று கூறப்­ப­டு­கிறது.

ஆனால், இத்­த­கைய மாற்­றங்­கள் சட்­ட­வி­ரோ­த­மா­னவை, ஆபத்­தா­னவை. அவை கார­ண­மாக வண்டி வேக­மா­கச் செல்­லுமா என்­பது இது­வரை மெய்ப்­பிக்­கப்­ப­டாத ஒன்று என்று சாலை பாது­காப்பு, பந்­த­யத் துறை வல்லு­நர்­கள் கூறி­ய­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­தது.

'எஸ்­பி­ஆர் டிராக்­டேஸ்' என்ற நிறுவ­ன­த்தைச் சேர்ந்த ஜோசஃப் லீ, இத்­த­கைய மாற்­றங்­கள் ஆபத்­தா­னவை என்­றார். "தாய்­லாந்துப் பாணி பந்­த­யத்தை மலே­சியா தொடங்­கி­யது முதல் கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக இந்த பாணி தலை எடுத்­துள்­ளது.

"பல­ரும் உறுதி இல்­லாத அலு­மி­னி­யப் பட்­டை­க­ளைப் பொருத்து­கி­றார்­கள். கன­மான ஒரு­வர் பின்­னி­ருக்­கை­யில் அம­ர்ந்து செல்­லும்­போது அந்­தப் பட்டை உடைந்­து­வி­டும் ஆபத்து உண்டு," என்று அவர் எச்­ச­ரித்­தார்.

அதே­போல் எந்த தர­நி­லை­யி­லும் சேராத ஒல்­லி­யான டயர்­களை மாட்டி ஓட்­டி­னால் ஈர­மாக இருக்­கும் சாலை­களில் செல்­லும்­போது எளி­தில் வழுக்­கி­வி­டும் என்று 'சிங்­கப்­பூர் சேஃப்டி டிரை­விங் சென்­டர்' என்ற வாகனமோட்ட கற்றுத்தரும் நிலை­யத்­தின் உதவி நிர்­வாகி அமான் அல்­ஜு­னிட் குறிப்­பிட்­டார்.

இது­பற்றி கருத்து தெரி­வித்த 'ரேஸ்­ஒர்க்ஸ் மோட்­டார் ஸ்போர்ட்ஸ்' என்ற மோட்­டார்­சைக்­கிள் பட்­டறை உரி­மை­யா­ளர் நோர்­மன் லீ, இது­போன்ற மாற்­றங்­க­ளைச் செய்ய வேண்­டாம் என்று மோட்­டார்­சைக்­கிள்­கா­ரர்­களுக்குப் பட்­ட­றை­கள் ஆலோ­சனை கூற­வேண்­டும் என்­றார்.

மேடு, பள்­ளங்­களில் குதித்துப் போகும்போது ஆபத்து காத்­தி­ருக்­கும் என்று அவர் எச்­ச­ரித்­தார்.

ஜோகூர் பாரு­வில் செயல்­படும் பட்­ட­றை­களில் இத்­த­கைய பட்­டை­களை எளி­தில் பொருத்தி­வி­ட­லாம்.

சிங்­கப்­பூ­ரி­லும் சில பட்­ட­றை­கள் இந்த வேலை­க­ளைச் செய்­கின்­றன என்று தெரி­வ­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்­பிட்டது.