புத்தாண்டு கொண்டாட்டத்தை கடும் மழை வந்து கெடுத்தது

புத்தாண்டு கொண்டாட்டத்தை கடும் மழை வந்து கெடுத்தது

2 mins read
5956fd52-a6ca-4849-8b4f-863faef5acaa
-

சிங்­கப்­பூ­ரில் சீனப் புத்­தாண்டுக் கொண்­டாட்­டங்­களை மழை வந்து கெடுத்­து­விட்­டது. கடும் மழை கார­ண­மாக பல­ரும் தங்­கள் புத்­தாண்டுக் கொண்­டாட்ட திட்­டங்­க­ளைக் கைவிட்­டு­விட்­டார்­கள் அல்­லது மாற்­றிக்­கொண்­ட­னர்.

கடும் மழை பெய்­யும் என்று பொதுப் பய­னீட்­டுக் கழ­கம் ஞாயிற்­றுக்­கி­ழமை பிற்­ப­கல் சுமார் 4.30 மணிக்கு எச்­ச­ரிக்கை விடுத்து இருந்­தது. இரண்டு நாள்­களில் வெள்­ளம் ஏற்­படும் வாய்ப்­பும் இருப்­ப­தாக அது தெரி­வித்­தி­ருந்­தது.

திங்­கட்­கி­ழமை பிற்­ப­கல், மாலை­யில் பல இடங்­களில் இடி­யு­டன் மழை பெய்­யும் என்று அன்று முற்­ப­கல் சுமார் 11.45 மணிக்­குத் தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் தெரி­வித்­தது.

பரு­வ­நி­லை­யும் கிட்­டத்­தட்ட கொண்­டாட்­டங்­க­ளைக் கெடுத்து­விட்­ட­தாக பல­ரும் தெரி­வித்­தனர்.

கொவிட்-19 கார­ண­மாக கட்டுப்­பா­டு­கள் நடப்­பில் இருந்­த­தால் கடந்த இரண்டு ஆண்டு­களில் முழு அள­வி­லான கொண்­டாட்­டங்­கள் இடம்­பெ­ற­வில்லை.

இந்த ஆண்­டில் கட்­டுப்­பாடு கள் அகன்று மக்­கள் மிகவும் ஊக்கத்து­டன் புத்­தாண்டுக் கொண்­டாட்­டங்­க­ளுக்கு ஆயத்­த­மா­னார்­கள்.

மழை கார­ண­மாக போக்­கு­வரத்­துச் சேவை­களும் பாதிக்­கப்­பட்­டன. அதோடு, உணவு விநி­யோ­கச் சேவை­களும் பாதிக்­கப்­பட்­டன.

திரு இயன் குண­சே­க­ரன் என்ற 26 வயது மாண­வர் ஞாயிற்­றுக்­கி­ழமை நண்­பர்­கள் 25 பேருக்கு விருந்து அளிக்க திட்­ட­மிட்டு கிராப் நிறு­வ­னத்­தி­டம் உண­வைக் கொண்­டு­வந்து கொடுக்­கும்­படி கேட்­டுக் கொண்­டார்.

ஆனால் மழை கார­ண­மாக ஊழி­யர்­கள் போதிய அள­வுக்கு வேலைக்கு வரா­த­தால் உணவு வந்து சேர 1.30 மணி நேர­மா­க­லாம் என்று பதில் வந்­தது. அதை­ய­டுத்து அவரே பல்­வேறு உணவு நிலை­யங்­க­ளுக்­கும் சென்று உணவை வாங்கி வந்து­வி­ருந்து அளித்­தார்.

இரண்டு நாள்­கள் நடக்க இருந்த கிட்­டத்­தட்ட 15 சிங்க நடன நிகழ்ச்­சி­கள் மழை கார­ண­மாக பாதிக்­கப்­பட்­ட­தாக யுனைட்­டெட் டிரா­கன் லயன் டான்ஸ் என்ற நட­னக்­கு­ழுவை நடத்­தி­வ­ரும் கென்­னத் லீ என்­ப­வர் தெரி­வித்­தார். இருந்­தா­லும் கலை­ஞர்­களும் பார்­வை­யா­ளர்­களும் ஊக்­கம் குறை­யா­மல் இருந்­த­தா­க­வும் அவர் கூறி­னார்.

குடி­யி­ருப்­புப் பேட்­டை­களில் இரண்டு ஆண்டுகளுக்­குப் பிறகு கொண்­டாட்­டங்­கள் திரும்பி இருப்­ப­தால் எல்­லா­ருமே மகிழ்ச்சி அடை­வ­தாக அவர் தெரி­வித்­தார்.