வெளிநாட்டு ஊழியரிடம் அக்கறை, ஆதரவு, உதவிக்கரம்: அயராது பாடுபடும் 'இந்திய நண்பர்கள் ஐக்கியம்' அமைப்பு

வெளிநாட்டு ஊழியரிடம் அக்கறை, ஆதரவு, உதவிக்கரம்: அயராது பாடுபடும் 'இந்திய நண்பர்கள் ஐக்கியம்' அமைப்பு

2 mins read
50adab0d-5601-4f94-b259-0c9f620c995c
-

தமிழ்­நாட்­டி­லி­ருந்து சிங்­கப்­பூருக்கு வேலைக்கு வந்­துள்ள ஊழி­யர்­கள் வேலை இடங்­களில் எதிர்­நோக்­கும் சவால்­களைத் திறம்­பட சமா­ளிக்­க­வும் அவர்­களின் மன­உ­ளைச்­ச­லைப் போக்க­வும் அவர்­கள் மீது அக்கறை காட்டி ஊக்­கப்­படுத்தவும் 'இந்­திய நண்­பர்­கள் ஐக்­கி­யம்' எனும் அமைப்பு அய­ராது பாடு­பட்டு வரு­கி­றது.

இந்த அமைப்பு, கடந்த 30 ஆண்­டு­க­ளாக ஷார்ட் ஸ்தி­ரீட் தமிழ் மெத­டிஸ்ட் தேவா­ல­யத்­தின் உத­வி­யு­டன் செயல்­பட்டு வரு­கிறது.

ஈசூன், மண்­டாய், துவாஸ், காக்கி புக்­கிட், உட்­லண்ட்ஸ் பகு­தி­களில் உள்ள வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தங்­கும் விடு­தி­களில் ஆங்­கி­லம், கணினி, ஆட்­டோ­கேட் (Autocad) வகுப்­பு­களை இல­வ­ச­மாக நடத்தி வெளி­நாட்டு ஊழி­யர்­களின் திறன்­களை மேம்­படுத்தி வரு­வ­தாக இந்த அமைப்பு அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­தது.

வெளி­நாட்டு ஊழி­யர்­கள் சிங்­கப்­பூ­ரின் சட்ட விதி­மு­றை­களை நன்கு புரிந்­து­கொண்டு, பொறுப்­பு­டன் செயல்­பட அவர்­க­ளுக்­குச் சட்ட ஆலோ­ச­னை­கள் வழங்­கப்­பட்டு வரு­கின்றன.

பொது விடு­முறை நாள்­களில் நண்­பர்­க­ளி­டையே நட்­பு­றவை வளர்த்­துக்­கொள்­ளும் வகை­யில் சிறப்பு நிகழ்­சி­களும், விளையாட்டுகளும் பல்­வேறு போட்­டி­களும் நடத்­தப்­படு­கின்­றன. இந்­தி­யர்­கள் மட்­டு­மல்­லாது, பங்­ளா­தேஷ், சீனா­வி­லி­ருந்து வந்­துள்ள வெளி­நாட்டு ஊழி­யர்­களும் பயன்­பெ­றும் வகை­யில் நிகழ்ச்­சி­கள் இடம்பெறுகின்றன.

இந்த அமைப்பு, கடந்த டிசம்­பர் மாதம் 2ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை, பல்­வேறு தங்கு­மிடங்­களில் சுமார் 2,000க்கும் மேற்­பட்ட விடுதி வாழ் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் பங்­கேற்­கும் வகை­யில் கிறிஸ்­து­மஸ் கொண்­டாட்ட நிகழ்ச்­சி­கள், கிறிஸ்­து­மஸ் கீத ஆரா­த­னை­க­ளை­யும் நடத்தி பரிசு­க­ளை­யும் உண­வை­யும் வழங்கிச் சிறப்­பித்­தது.

ஷார்ட் ஸ்தி­ரீட் தமிழ் மெத்­டிஸ்ட் தேவா­ல­யத்­தில் கடந்த டிசம்­பர் மாதம் 11ஆம் தேதி­யன்று இல்­லப் பணிப் பெண்­க­ளுக்­காக நடத்­தப்­பட்ட சிறப்பு கிறிஸ்­துமஸ் கொண்­டாட்ட நிகழ்ச்­சி­யில் 70க்கும் மேற்­பட்­டோர் பங்­கேற்று பய­ன­டைந்­த­னர்.

சீனப் புத்­தாண்டை முன்­னிட்டு இம்­மா­தம் 23ஆம் தேதியன்று பொங்­கோல் விடுதி ஊழி­யர்­களுக்­காக பொங்­கோல் பிபிடி 1பி (PUNGGOL PPT 1B) விடு­தி­யோடு இணைந்து நிகழ்ச்­சி­கள் நடத்­தப்­பட்­டன.

'குற்றச்செயல்­க­ளைக் குறைப்­பதற்­கான விழிப்­பு­ணர்வு' என்ற தலைப்­பில் சிங்­கப்­பூர் காவல்­துறை சார்­பாக ஒரு நிகழ்ச்சியும் நடத்­தப்­பட்­டது.

சிங்­கப்­பூர் இரட்­ச­ணிய சேனை மையத்­தோடு இணைந்து விடுதி­யில் தங்­கி­யி­ருக்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு மருத்துவப் பரி­சோ­த­னை­யும் மருத்­துவ ஆலோ­ச­னை­களும் வழங்­கப்­பட்­டது. நிகழ்ச்­சி­யில் பங்­கேற்ற ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் மாண்­ட­ரின் ஆரஞ்­சுப் பழங்­கள் வழங்­கப்­பட்டு வாழ்த்­து­கள் பரி­மா­றிக்­கொள்­ளப்­பட்­டன.

வரும் மே மாதம் தொழிலாளர் தினத்­தன்று பள்ளித் திடலில் 300 பேருக்கு விளை­யாட்டுப் போட்டி­கள் நடத்த திட்­ட­மிட்­டுள்­ள­தாக இந்­திய நண்­பர்­கள் ஐக்­கி­யம் அமைப்பு தெரி­வித்­தது.