புகார் தெரிவித்தோரைக் குறி வைக்கும் மோசடிப் பேர்வழிகள்

புகார் தெரிவித்தோரைக் குறி வைக்கும் மோசடிப் பேர்வழிகள்

2 mins read
503dee30-8793-4b35-bf5a-c620968a9443
கேஸ் அமைப்­பி­டம் தாக்­க­லாகி இருக்­கும் புகார்­க­ளுக்­கான அல்­லது கோரிக்­கை­களுக்­கான எண் என்று சொல்லி ஒரு போலி எண்ணை மின்­னஞ்­சல் மூலம் மோச­டிக்­கா­ரர்­கள் அனுப்­பு­கி­றார்­கள். படம்: சிங்­கப்­பூர் பய­னீட்­டா­ளர் சங்­கம் (கேஸ்) -

கேஸ் எனப்­படும் சிங்­கப்­பூர் பய­னீட்­டா­ளர் சங்­கத்­தி­டம் புகார் தெரி­வித்து இருப்­போ­ரி­டம் இருந்து தக­வல்­க­ளைத் திருட போலி மின்­னஞ்­சல்­கள் மூலம் மோச­டிக்­கா­ரர்­கள் முயல்­கிறார்கள்.

தாங்­கள் செய்­தி­ருக்­கும் புகார்­கள் பற்­றிய மேல் தகவல்­களைத் தெரிந்­து­கொள்ள மூன்­றாம் தரப்பு இணை­யத்­தளம் ஒன்­றுக்குச் செல்­லும்­படி அந்த மோச­டிக்­கா­ரர்­கள் புகார் தெரிவித்­த­வர்­க­ளி­டம் சொல்­கிறார்­கள்.

கேஸ் அமைப்­பி­டம் தாக்­க­லாகி இருக்­கும் புகார்­க­ளுக்­கான அல்­லது கோரிக்­கை­களுக்­கான எண் என்று சொல்லி ஒரு போலி எண்ணை மின்­னஞ்­சல் மூலம் மோச­டிக்­கா­ரர்­கள் அனுப்­பு­கி­றார்­கள்.

அதோடு, அத்­த­கைய மின்­னஞ்­சல்­களில் உரை­யா­டு­வதற்­கான ஓர் அடை­யா­ள­மும் இருக்­கிறது.

அதன் வழி மூன்­றாம் தரப்பு இணை­யத்தளத்­திற்­குச் சென்று மேல் விவ­ரங்­க­ளைத் தெரிந்­து­கொள்­ள­லாம் என்­றும் மோச­டிக்­கா­ரர்­கள் தெரி­விக்­கி­றார்­கள்.

புகார் தெரி­வித்­த­வர்­களுக்குக் கிடைக்­கக்­கூ­டிய இழப்­பீட்­டுத் தொகை உள்­ளிட்ட பல விவ­ரங்­களும் அந்த மூன்­றாம் தரப்பு இணை­யத்­த­ளத்­தில் இருப்­ப­தா­க­வும் மோச­டிக்­கா­ரர்­கள் கூறு­கிறார்­கள்.

அத்­த­கைய போலி மின்­னஞ்­சல்­களில் கேஸ் அமைப்­பின் சின்­ன­மும் இருக்­கிறது.

மோச­டிக்­கா­ரர்­கள் அனுப்பும் மின்­னஞ்­சல்­கள் "odoo@compueconomicos.com", "wilson@v3.sg", and "bhm200025@sdh.sg" போன்ற முக­வ­ரி­க­ளுக்­குச் செல்­லும்படி பய­னீட்­டா­ளர்­க­ளைக் கேட்­டுக்­கொள்­கின்­றன.

இந்த விவ­ரங்­க­ளைத் தெரி­வித்த கேஸ் அமைப்பு, இந்த முக­வ­ரி­கள் தனக்குத் தொடர்­பில்­லா­தவை என்று கூறி­யது.

கேஸ் அமைப்­பிற்கு ஜன­வரி 21 முதல் புகார்­கள் வந்­த­தாக அதன் நிர்­வாக இயக்­கு­நர் லீ சியாவ் ஹுவி அறிக்கை ஒன்­றில் கூறி­னார்.

மோச­டிக்­கா­ரர்­கள் பற்றி கேஸ் அமைப்பு தன்­னு­டைய இணை­யத்தளத்­தி­லும் ஃபேஸ்புக்­கி­லும் ஜன­வரி 22ஆம் தேதி பல அறி­விப்­பு­களை விடுத்து பய­னீட்­டா­ளர்­களை எச்­ச­ரித்­தது.

அதோடு மட்­டு­மன்றி, பய­னீட்­டா­ளர்­க­ளுக்கு மின்­னஞ்­சல்­களை அனுப்பி இந்த அமைப்பு அவர்­களை விழிப்­பூட்­டி­யது.

கேஸ் அமைப்­பின் தக­வல் தொழில்­நுட்ப முறை மிக பாது­காப்­பாக இருக்­கிறது என்­றும் திரு­வாட்டி லீ கூறி­னார்.

மேல் விசா­ரணை நடந்து வரு­வ­தா­க­வும் இந்த விவ­கா­ரம் பற்றி காவல்­து­றை­யி­டம் தெரி­விக்­கப்­பட்டு இருப்­ப­தா­க­வும் அவர் தெரிவித்தார்.

போலி­யான மின்­னஞ்­சல்­களைப் பெறு­வோர் அதை நம்பி செயல்­ப­டக்­கூ­டாது. தனிப்­பட்ட விவ­ரங்­க­ளைத் தரக் கூடாது என்று அவர் அறி­வு­ரை கூறி­னார்.

அத்­த­கைய மின்­னஞ்­சல்­கள் யாருக்­கா­வது வந்­தி­ருந்­தால் அவர்­கள் 9795 8397 என்ற எண் மூலம் கேஸ் அமைப்­பு­டன் தொடர்­பு­கொள்­ள­லாம்.

அல்­லது dataprotection@case.org.sg முக­வரி மூலம் தொடர்­பு­கொள்­ள­லாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.