சமூகப் பிணைப்பையும் உடன் இருக்கும் உணர்வையும் வலுப்
படுத்துவது, சிறந்த சமூகத்தை உருவாக்கப் பணியாற்றுவது போன்றவை சிங்கப்பூரர்கள் ஒற்றுமையுடன் நீடிக்க உதவும்.
தொடர்ந்து முன்னேறுவதில் சிங்கப்பூர் கவனம் செலுத்தி
வரும் அதேசமயம் அது எதிர்கொள்ளக்கூடிய சவால்களைச் சமாளிக்க இந்த ஒற்றுமை இன்றி யமையாதது என்று கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் தெரிவித்துள்ளார்.
வசந்தகாலத் திருவிழா வரவேற்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந் தினராகக் கலந்துகொண்ட திரு எட்வின், புவிசார் அரசியல் பதற்றமும் உலகளாவிய பொருளியல் குறித்த எச்சரிக்கையும் அந்த சவால்களில் சில என்றார்.
சிங்கப்பூர் சீன கலாசார மையமும் சிங்கப்பூர் சீன குலவழிச் சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சீன சமூக மக்களும் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
திரு எட்வின் பேசுகையில், "நமது தலைமுறையினரைப் புரிந்து நடந்துகொள்ளவும் அனைவரையும் உள்ளடக்கிய பகிர்வு அனுபவங்களை சக சிங்கப்பூரர்களுடன் இணைந்து உருவாக்கவும் கலை, கலாசாரம் மற்றும் மரபுடைமை தொடர்பான அம்சங்களில் சிங்கப்பூரர்கள் பங்கேற்பது அவசியம்.
"வலுவான தோழமை உணர்வு, இருதரப்பு நம்பிக்கை ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளை வளர்க்க கலையும் கலாசாரமும் கை
கொடுக்கும்.
"எனவே, இவற்றில் பங்கேற்பதை நாம் தொடர வேண்டும். அத்துடன் பல்வேறு பின்னணி
களைக் கொண்டோரை ஓரணியில் திரட்டுவதையும் நாம் தொடருவது அவசியம்.
"நெருக்கத்தைப் பேண நாம் சமூகங்களுடன் இணைந்து பணியாற்றுகிறோம். அதேபோல ஒருவர்மீது ஒருவர் கவனம் செலுத்தி, பராமரிக்கும் கலாசாரத்தைப் பின்பற்றுகிறோம். இவை இரண்டும் நமது சிங்கப்பூர் சமூகத்தின் மீள்திறனை மேம்படுத்தும்," என்று திரு எட்வின் தமது உரையில் குறிப்பிட்டார்.

